மாணவர்கள் நுழைவுத் தேர்வை சிறப்பாக எழுதும் விதமாக தொலைக்காட்சிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உயர் கல்வியில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

திருமலையில் உள்ள சிங்கேரி சங்கரமடம் சாரதா பீடத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனின் மகன் சந்திரமோகனுக்கும் சென்னையை சேர்ந்த வைஷ்ணவி என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

பின்னர் ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் புதுமண தம்பதிகளுடன் அமைச்சர் கே.பி. அன்பழகனும் சுவாமி தரிசனம் செய்தனர்.

தரிசனத்திற்கு பிறகு கோவிலில் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தமிழகத்தில் இன்றும், நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது .முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறக்கூடிய இந்த மாநாட்டிற்கு நானும் பங்கேற்க வேண்டி உள்ள நிலையில் எனது மகன் திருமணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது எனவே பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

திருமணத்திற்குப் பிறகு மாநாட்டில் பங்கேற்பு பங்கேற்பேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு ( எம்.ஒ.யு ) ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டது.

அதேபோன்று அவர் வழியில் நடைபெறக்கூடிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இரண்டு நாட்கள் நடைபெறக்கூடிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக மூன்று லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் வர உள்ளது இதன் மூலமாக படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளது. எனது சொந்த மாவட்டமான தர்மபுரியில் 72 அங்கன்வாடி மையங்களில் இந்த வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளது முதல்வர் ஜெயலலிதா இருந்த பொழுது 110 விதியின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது.

அதேபோன்று எடப்பாடி பழனிசாமி ஆறு மாதத்திற்கு முன்பு 110 விதியின் கீழ் பல திட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி எல்கேஜி யுகேஜி மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. 21ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது 242 மாணவர்கள் சேர்ந்த நிலையில் தற்போது மேலும் 60 பேர் சேர்வதற்கு முன் வந்துள்ளனர்.

பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு தரமான கல்வியை வழங்கும் விதமாக செய்யப்பட்டு வருகிறது .இந்திய அளவில் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 25.8 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் 48.6 சதவீதம் ஆக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 98.48 சதவீதமாக உயர் கல்வியில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு மேல்நிலைப்பள்ளி வரை எல்கேஜி யுகேஜி ஐந்தாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வி, தமிழ் வழி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு சரியான முறையில் கையாண்டு அதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து வரும் சர்ச்சைக்கு தீர்வு காணும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறுகள் எங்கு நடந்தாலும் அவற்றை கண்டுபிடித்து வருங்காலத்தில் யாரும் பாதிக்காத வகையிலும் அந்த போன்ற தவறுகள் நடைபெறாத வகையில் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா இருந்த போது 65 புதிய கல்லூரிகள் தொடங்கபட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 16 புதிய கல்வி கல்லூரிகள் திறக்கப் பட்டுள்ளது மொத்தம் 81 புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

1255 புதிய பாடத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது இதன் மூலமாக மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. மாணவர்கள் நுழைவுத் தேர்வை சிறப்பான முறையில் கையாண்டு மாணவர் சேர்க்கை உயர்கல்வியில் அதிகரிக்கும் விதமாக அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொலைக்காட்சிகள் மூலமாகவும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு நுழைவு தேர்வில் நல்ல முறையில் எழுதி மாணவர் சேர்க்கை விகிதம் அதிகப்படுத்தும் விதமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...