10 சத ஒதுக்கீடு; மோடிக்கு நன்றி கூற… நெல்லையில் திரள்கிறது சைவ வேளாளர் சங்கம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் நெல்லை
reservationvictory - 2026

முற்பட்ட பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம், வரும் பிப்ரவரி மாதம் முதலே அமலுக்கு வருகிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு முற்பட்ட சமுதாயங்கள் பலவும் நன்றி தெரிவித்து போஸ்டர்களை ஒட்டி, கூட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட அனைத்து முற்படுத்தப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்துக்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பில் நெல்லையில் பரவி வரும் தகவலில்…

அனைத்து முற்படுத்தப் பட்ட சமுதாயத்தில் உள்ள ஏழ்மை நிலையில் உள்ள (பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்) மக்களின் நலனில் அக்கறை கொண்டு மத்திய அரசு (பிரதமர் மோடி) 10% இடஒதுக்கீடு வழங்கிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது

இது நம் சமுதாய மக்கள் முன்னேற வழி ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக., உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தடுக்க முயற்சி செய்து வருகிறார்கள்!

இதனை தடுக்கவும் நமக்கு வாய்பு அளித்த பிரதமருக்கு நன்றி கூறவும் நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ள படி கூட்டம் நடைபெறும்

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

கூட்டத்தில் அனைத்து முற்படுத்தப்பட்ட அமைப்புகள், அதன் கிளை சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், முற்படுத்தப்பட்ட மக்கள் நம் ஒற்றுமையினை காட்ட பெரும் திரளாக வருகை தந்திட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்!

நிகழ்ச்சி நிரல்

நாள்-. 02.02.2019
சனிக்கிழமை காலை 10மணி
இடம்.- ராஜ் மஹால் திருமண மண்டபம்
திருநெல்வேலி ஜங்ஷன்.

தலைமை.-திரு சே. பகவதி முத்து (எ) புளியரை ராஜா.
முன்னிலை-.முற்படுத்தப்பட்ட சங்க பொறுப்பாளர்கள்
பொருள்-.பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக.
சிறப்புரை-. அனைத்து முற்படுத்தப்பட்ட சங்க பொறுப்பாளர் கள்.
அனைவரும் வருக!

நம் பலத்தை தமிழக அரசியல் கட்சிகளுக்கு தெரிவிப்போம் அன்புடன்,
வே.குருசாமி
ஒருங்கிணைப்பாளர். முற்படுத்தப்பட்டோர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் – திருநெல்வேலி மாவட்டம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.