திங்கள் கிழமை நேற்று மாரடைப்பால் காலமான நடிகர் கிரேசி மோகன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

திரைப்பட வசனகர்த்தா, நாடக மேடைகளில் நடித்தவர், இயக்கியவர், எழுத்தாளர், மரபுக் கவிஞர், நடிகர் என பன்முகத் திறமை பெற்றவராக இருந்த நகைச்சுவை அரசர் கிரேசி மோகன் திங்கள் கிழமை நேற்று மாரடைப்பால் காலமானார். 66 வயதான கிரேஸி மோகன் திரையுலகில் பலருடன் நெருங்கிப் பழகியவர்.

நடிகர் கமல்ஹாசனின் படங்களுக்கு நகைச்சுவை வசனங்கள் எழுதிக் கொடுத்து, நடிக்கவும் செய்துள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியரான கிரேஸி மோகன் படிக்கும் போதில் இருந்து நாடகக் கலையில் அதிக ஆர்வம் கொண்டவர்!

கல்லூரியில் நாடகக் கதை எழுதி அதனை அரங்கேற்றியவர். இந்த நாடகத்திற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த எழுத்தாளருக்கான விருதும் கமல் ஹாசன் கையால் பெற்றுள்ளார்.

கிரேஸி மோகனுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சையை அவரது உடல் ஏற்காத நிலையில், அவரது உயிர் பிற்பகல் 2 மணி அளவில் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

அவரது உடல் பின்னர் வீட்டுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கொண்டு வரப் பட்டது. இன்று காலை 10 மணி அளவில் இறுதிச் சடங்கு தொடங்கி பிற்பகல் 11 மணி அளவில் பெசண்ட் நகர் மின் மயானத்தில் கிரேசி மோகன் உடல் எரியூட்டப் பட்டது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...