காதலனுடன் போன மகள்: இறுதிச் சடங்கு நடத்திய தந்தை!

Published:

archana poster - 2026

தங்களது விருப்பத்தை மீறி காதலனுடன் சென்ற மகளுக்கு இறுதிச் சடங்கு செய்த பெற்றோர், அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காதல் திருமணம் செய்த மகளுக்கு தந்தை கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து போஸ்டரை ஓட்டினார்! மேலும், இறுதிச் சடங்குகள் செய்தார். இது உறவினர்களையும் அங்குள்ளவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்தவர் சரவணன்! பால் வியாபாரியான இவருக்கு மனைவி மகள் உள்ளனர்! மனைவி யுவராணி மகள் அர்ச்சனா (வயது 21). அந்தப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23 வயது) வாணியம்பாடியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்

அர்ச்சனாவும் மணிகண்டனும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது! பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சில நாட்களுக்கு முன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய அர்ச்சனா,  திருப்பூரில் திருமணம் செய்துகொண்டார்

இதுகுறித்து ஆம்பூர் மகளிர் போலீசில் அர்ச்சனாவின் தந்தை சரவணன் புகார் செய்தார் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அர்ச்சனாவும் மணிகண்டனும் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அவர்களை நேற்று விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறினர் ஆனால் இருவரும் நேற்று ஆஜராகாமல் திருப்பூர் சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர் இந்த நிலையில் வேதனையில் இருந்த அர்ச்சனாவின் பெற்றோர் தங்களது மகள் உயிரிழந்துவிட்டதாக அர்ச்சனாவின் படத்துடன் கூடிய கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனரை பல இடங்களில் வைத்தனர்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சரவணனை சந்தித்து ஆறுதல் கூறி பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி கூறினார் ஆனால் அதற்கு சரவணன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்

மேலும் அர்ச்சனாவின் படத்துக்கு இறுதிச் சடங்குகளையும் செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்கு உள்ள சுடுகாட்டில் படத்தை அடக்கம் செய்தார் இது பார்த்து பார்த்து இருந்தவர்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தியது

Related articles

Recent articles

spot_img