டியர் டி.சி. சார்… நெல்லை மாநகர காவல் துணை ஆணையரின் வித்தியாச முயற்சி!

ஹெல்மட் அணிவதின் முக்கியத்துவம் என்ன ? ஹெல்மட் அணியாத காரணத்தால் கடந்த ஏற்பட்ட விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்து பேசினேன் .

போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று பல நேரங்களில் குரல்கள் கேட்கத்தான் செய்யும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் காவல் துறை உயரதிகாரிகள் இதனை மேடைகளில் சொல்லிவிட்டு நடைமுறைப் படுத்த ஏதோ முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

நெல்லையில் இத்தகைய முயற்சியை செய்துவருகிறார் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சரவணன். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள தகவல் இது…

Everything begins with a an idea.

Letter to DC

Dear DC Sir, 
I am……….., studying in Laxmi Raman Matriculation higher secondary school …..

இன்று திருநெல்வேலி மாநகரம் உத்தம்பாண்டியன்குளம் லக்ஷ்மி ராமன் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியின் விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

ஹெல்மட் அணிவதின் முக்கியத்துவம் என்ன ? ஹெல்மட் அணியாத காரணத்தால் கடந்த ஏற்பட்ட விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்து பேசினேன் .

பள்ளியில் பயிலும் 750க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எனது விலாசமிட்ட Post Card வழங்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் ஹெல்மட் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களின் வெற்றிக் கதையை Dear DC Sir,, என்ற தலைப்பில் எனக்கு அனுப்ப கூறியுள்ளேன் . வேறு ஏதேனும் கருத்துகளை கூற வேண்டுமென்றாலும் எழுதக் கூறியுள்ளேன் . இதன் மூலம்

🔸மாணவர்கள் காவல்துறை இடையிலான இடைவெளி குறையும் .

🔸யார் சொன்னாலும் போக்குவரத்து விதியை மதிக்காதவர்களும் தங்கள் குழந்தைகள் சொன்னால் கேட்ப்பார்கள்

🔸தங்கள் பிரட்சனைகளை அரசு அதிகாரிகளிடம் எடுத்து செல்லும் மனோபாவம் வளரும்.

🔸சிறந்த முறையில் எழுதப்படும் 20 கடிதங்களுக்கு “மதிப்புமிகு மாணவன் “ என்ற சான்றிதழும் “சிறப்பு பரிசும் “வழங்க திட்டம் .

🔸இப்பள்ளியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் .

நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை

– என்று திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் ச. சரவணன் தன் பேஸ்புக் பக்கத்தில் இதனைப் பகிர்ந்துள்ளார்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...