இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த 10 விதிகள்…

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

Staying Safe on the Internet - 2026

இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த 10 விதிகள்

1. உங்களை பற்றிய தனித்தகவல்களை குறிப்பிட்ட அளவு மட்டுமே தெரியப்படுத்தினால் போதுமானது . நினைவில் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை திறந்த புத்தகம் அல்ல.

2. இந்த உலகில் இலவசம் என்று எதுவுமில்லை. இலவசம் ,தள்ளுபடி (Free- Discount -Sale) என்பதற்காக எந்த linkயைம் டவுன்லோடு செய்ய வேண்டாம் .

3. இணையத்தில் ரகசியம் என்று எதுவுமில்லை . உங்கள் பேச்சு யாராலும் கேட்கப்பட்டு கொண்டிருக்கலாம். நீங்கள் அனுப்பும் படம் யாராலும் பார்க்கபடலாம்.

4. எந்த வங்கியும் , எந்நேரத்திலும் உங்கள் கார்டு நம்பரையோ, PIN நம்பரையோ கேட்கமாட்டார்கள்.

5. PIN நம்பர்கள் உங்கள் டூத்பிரஷ் போல , நீங்கள் மட்டுமே உபயோகப் படுத்துங்கள், 3 மாத காலத்திற்கொருமுறை மாற்றி விடுங்கள் .

6. சமூக வலைதளத்தில் வரும் எல்லா செய்திகளையும் உண்மை என கருதி பகிராதீர்கள். வதந்திகள் அனைத்தும் தற்போது செல்போனிலேயே வருகிறது.

7. இணையத்தில் நீங்கள் என்ன விஷயங்களை தேடுகின்றீர் என்பதையும் பல கண்கள் பார்த்துக் கொண்டே உள்ளன. வன்முறை , ஆபாசம் உங்கள் தேடுதலில் தவிருங்கள் .

8. தெரியாமல் செய்துவிட்டேன் என்றால் எதுவும் சரியாகாது. நீங்கள் அனுப்பும் எல்லா செய்திகளும் நீங்கள் ஒப்புக்கொண்டு அனுப்பியாதாகவே அர்த்தம்.

9. இணையவழிக் குற்றங்கள் (Cyber laws) பற்றிய சட்டங்கள் நாளுக்கு நாள் கடுமையாகி வருகிறது. எனக்கு சட்டம் தெரியாது என்று கூறி தப்பிக்க முடியாது .

10.நேரில் எதனை செய்ய மாட்டோமோ அதை இணையத்திலும், சமூக வலைத்தளத்திலும் ( Social Media) செய்யாதீர்கள் .

  • ச. சரவணன்,
    காவல்துணை ஆணையர் (சட்டம் &ஒழுங்கு) திருநெல்வேலி மாநகரம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.