பாகிஸ்தானுடன் பேசுவோம்… காஷ்மீர் பற்றி அல்ல..! பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

rajnath singh on 370 - 2026

பாகிஸ்தான் உடன் இனி பேச வேண்டுமெனில் அது காஷ்மீர் பற்றியது அல்ல! ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி தான் பேச்சு வார்த்தை நடத்தப் பட வேண்டும் – என்று கூறியுள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். @rajnathsingh @DefenceMinIndia #RajnathsinghRocks

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

அரியானா மாநிலம் பஞ்சகுலாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது…

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக மட்டுமே, சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370வது பிரிவு நீக்கப்பட்டது. ஆனால், நமது அண்டை நாடு இந்தியா தவறு செய்துவிட்டதாகக் கூறி சர்வதேச நாடுகளின் கதவை தட்டியது.

பயங்கரவாதத்துக்கு ஆதரவு தருவதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அப்படி பேச்சுவார்த்தை நடந்தால் அது காஷ்மீர் குறித்து இருக்காது; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தே இருக்கும்!

சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமர் அந்நாட்டின் பாலகோட்டில் நமது ராணுவம் நடத்திய தாக்குதலைவிட பெரிய தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதன் மூலம் பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் பிரதமரே உறுதி செய்துள்ளார் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.