ஓய்வுபெற்ற அட்மிரல் சுஷில் குமார் ஐசக்குக்கு வீரவணக்கம்!

இந்திய கடற்படையின் 16ஆவது தளபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற அட்மிரல் சுஷில் குமார் ஐசக் இன்று தனது 79வயதில் இயற்கை எய்தினார்.

sushil kumar isac

இந்திய கடற்படையின் 16ஆவது தளபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற அட்மிரல் சுஷில் குமார் ஐசக் நவ.27 (நேற்றூ) தனது 79வயதில் இயற்கை எய்தினார்.

இவரது சொந்த ஊர் இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள நெய்யூர் கிராமம் ஆகும்.

தேசத்திற்கான தனது பணிக் காலத்தில் போர்த்து கீசியர்களுடன் நடைபெற்ற 1961 கோவா மீட்பு போர் , 1965 இந்திய பாகிஸ்தான் போர் மற்றும் 1971 வங்காளதேச மவிடுதலை போர் என மூன்று போர்களில் நேரடியாக கலந்து கொண்டவர்.

மேலும் 1999 கார்கில் போரின் போது கடற்படை தளபதியாக இருந்த இவருடைய மேற்பார்வையின் கீழ் இந்திய கடற்படை பாகிஸ்தானை முற்றுகை இட்டு எல்லா கடல்வழி பாதைகளையும் அடைத்தது.

இதனால் வர்த்தகம் நடைபெறாமல் வெறும் 6 நாட்களுக்கு மட்டுமே பாகிஸ்தானில் எரிபொருள் இருப்பு இருக்க போர் நிறுத்த ஓப்பந்தத்திற்கு பாகிஸ்தான் கெஞ்சியது குறிப்பிடத் தக்கது.

அட்மிரல் சார் வீரவணக்கங்கள் !! ஜெய்ஹிந்த்

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :