October 26, 2021, 4:59 am
More

  ARTICLE - SECTIONS

  ஆண்களுக்கு அரைக்கிரை தரும் ஆனந்த வாழ்வு!

  araikirai - 1

  அரைக்கீரை குட்டையாக, கட்டையான கனத்த வேரில் பல கிளைகள் விட்டு நெருக்கமாக புதர் போல வளரும். இந்தச் சிறு கிளைகளை தரையிலிருந்து அரையடி முதல் ஒரு அடி உயரம் வரை ஒடித்து கீரை சேகரிப்பார். கிளைகளை ஒடித்து எடுக்க எடுக்க அந்தயிடத்தில் மறுபடி கிளைகள் வளரும். அரைக்கீரையை ஒரு முறை பயிரிட்டால் அது பல மாதங்களுக்குப் பலன் தரும்.

  அரைக்கீரையைத் தினசரி சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பலம் ஏறும், உடலில் ஏற்பட்ட பல வியாதிகளைக் குணப்படுத்தக் கூடிய சக்தி அரைக்கீரைக்கு உண்டு அரைக்கீரையின் சக்தி எப்படிப்பட்டது என்பதை என்னும் பலர் அறியாமல் இருக்கின்றனர்.

  எந்த வகையான வியாதிகளையும் அரைக்கீரை குணப்படுத்தி விடும். எந்த வியாதியஸ்தரும் அரைக் கீரையைப் பயமின்றிச் சாப்பிடலாம்.

  அரைக்கீரை பயன்கள் அரைக்கீரையைத் தினசரி சாப்பிட்டு வந்தால் உடலில் உஷ்ணம் அதிகம் உண்டாகும். சூட்டை கிளப்பி விடும் என்று பயந்துக்கொண்டு அரைக்கீரையைச் சாப்பிட மாட்டார்கள்.

  வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. அரை கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே அரை கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் அடிக்கடி சாப்பிடுவது அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது.

  100 கிராம் அளவு அரைக்கீரையில் 91.69 கிராம் நீர் உள்ளது. 2.46 கிராம் புரதம், 0.33 கிராம் கொழுப்பு (லிபிட்), 4.02 கிராம் கார்போஹைடிரேடு, 215 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), 2.32 மில்லி கிராம் இரும்புச் சத்து, 55 மில்லி கிராம் மெக்னீசியம், 50 மில்லி கிராம் பாஸ்பரஸ், 611 மில்லி கிராம் பொட்டாசியம், 20 மில்லி கிராம் சோடியம் உள்ளது.

  ஔவையாரால் பாடப் பெற்றது
  “அந்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்,
  கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்.”
  என்று திருமந்திரத்தில் ஔவையார் பாடியுள்ளார். அதன் மூலம் இதன் சிறப்பை அறிந்து கொள்ள இயலும்.

  குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் வாலிப வயதுள்ளவர்கள், இந்த அரைக்கீரையை வெங்காயம் போட்டு, நெய்யில் பொரித்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வருவார்களேயானால் அவர்கள் உடலில் புதிய இரத்தம் உண்டாகும்.

  இந்த இரத்தத்தில் புதிய தாது அணுக்கள் நிறைய உற்பத்தியாகும். ஆணுக்குத் தேவையான இந்த அதிமுக்கிய தாது தனிப்பட்ட சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

  எனவே இந்த தாதுவைப் பெற்ற ஆண், பெண்ணுடன் உடலுறவு கொண்டால், நீடித்த இன்பத்தை அனுபவிக்க முடியும்.

  இவ்வளவு சுலபமாக அரைக்கீரையிலிருந்து கிடைக்கும் தாதுப் பொருளை அநேகர் அடைய வழி தெரியாமல் தாது விருத்தி லேகியம் என்ற பெயரில் பல மட்டமான லேகியங்களை வாங்கிச் சாப்பிட்டு பயன் காணாமல் ஏங்கித் தவிக்கின்றனர். இவர்கள் இனிமேலாவது அரைக்கீரையைச் சாப்பிட்டு ஆனந்த வாழ்வு நடத்தட்டும்.

  வாலிபர்கள் தன் வாலிப வயதில் இச்சையை அடக்க முடியாமல் தவறான வழியில் சக்தியை (விந்துவை) வெளியேற்றிவிடுவார்கள்.

  இவர்கள் இந்த வழியை ஒருமுறை பின்பற்றினால் பிறகு அவர்கள் காரணமாக விலை மதிக்கமுடியாத சக்தி அனாவசியமாக அடிக்கடி அவ்வழியிலேயே செல்ல நேரிடும்.

  விந்து தன் சரீரத்தை விட்டு வெளியேறிவிடும். இதன் காரணமாக உடல் பலம் குறையும். சோம்பல் ஏற்படும். கண் பார்வை மங்கும். நாளாவட்டத்தில் சொப்பன ஸ்கலிதம் ஏற்பட்டு சக்தி தானே வெளியேறும்.

  இப்படிப்பட்ட நிலையிலுள்ள பல வாலிபர்களுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்து விடுவது உண்டு. வாலிப வயதில் தவறான வழியில் விந்துவை விட்டவர்கள், பெண்ணுடன் உடல் உறவுக் கொண்டு இன்பத்தை அனுபவிக்க முடியாது. சேர்ந்தவுடனேயே விந்து வெளியேறிவிடும். இப்படிப்பட்ட நிலையிலுள்ள வாலிப ஆண்கள் தினசரி அரைக்கீரையை சாப்பிட்டு வந்தால், இந்த நிலை மாறி விடும்.

  ஆண்மை குறைவு உடையவர்கள் அரைக்கீரையை தினசரி உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் படிப்படியாக ஆண்மையைப் பெற முடியம்,

  வியாதியினால் பீடிக்கப்பட்டு உடல் இழந்தவர்களுக்கு அரைக்கீரையைத் தினசரி நெய்யுடன் சேர்த்துப் பொரியல் அல்லது கடையல் செய்துக் கொடுத்து வந்தால் அவர்கள் நல்ல பலம் பெறுவார்கள்.

  நெஞ்சுவலி, இருதயவலி, வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வயிற்றில் இரைச்சல், அபானம் எறிதல், கைகால் வலி, மூட்டுகளில் வலி இது போன்ற தொந்தரவுகள் ஏற்படும், இவைகளை போக்க அரைக்கீரை மருந்து போல பயன்படுகிறது.

  வாயு தொந்தரவு உள்ளவர்கள், தினசரி , கீரையை வெள்ளைப் பூண்டு, பெருங்காயம் சேர்த்தும், கடைந்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வாயு ஏற்படாது. அவ்வப்போது வாயு கழிந்து விடும்.

  வாயு தொந்தரவினால் கஷ்டப்படுகிறவர்கள் அரைக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, சீரகம், சிருச், பச்சை மிளகாய் இவைகளைச் சோத்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்துத் தினசரி சாப்பிட்டு வந்தால் வாயு நீங்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் வாயுவே சேராது.

  அரைக்கீரை மசியல் அல்லது பொரியல் செய்து உணவுடன் சேர்த்து உண்பார்கள். இதனால் நமக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது.

  வாயுதொல்லையினால் அவதிப்பட்டால் அரைக் கீரையுடன் பூண்டு, மாகு, சீரகம் சேர்த்து (புளி சேர்க்காமல்) கடைந்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை விலகிவிடும்.

  பிரவித்த பெண் பலமிழந்து இருக்கும் போது உடல் பலம் பெற, இந்த அரைக்கீரையைக் கடைந்து சாப்பிட்டு வந்தால் குழந்தைக்குத் தேவையான பாலும் சுரக்கும். பிரசவித்த பெண்ணுக்கு ஆகாரம் கொடுக்க ஆரம்பித்த சமயம் அரைக்கீரையையும் கடைந்து கொடுப்பது நம் நாட்டு பழக்கத்தில் ஒன்றாகும்

  கண் நோய், கண் பார்வை மங்கல், கண் சிவத்தல், கண்ணில் சதா நீர் வடிதல், கண் குத்துதல் போன்ற கண் சம்பந்தமான கோளாறுகளினால் கஷ்டப்படுகிறவர்கள் அரைக்கீரையைத் தினசரி சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.

  சளியோடு இருமலும் இருந்து கஷ்டப்படும் போது அரைக்கீரையுடன் வெள்ளைப் பூண்டைச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் சளி முறிந்து விடும். இருமல் குணமாகும்.

  ஜலதோஷத்தினால் உண்டான சளி பிடிப்பு, இருமல், தொண்டைப் பன் ஆகியவற்றிற்கு இந்தக் கீரையைக் கடைந்து உணவில் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

  சிலருக்கு பசியே ஏற்படாது வேளைக்குக் கடனுக்கு சாப்பிடுவார்கள், இப்படிப்பட்டவர்கள் அரைக்கோட்டன் சீரகத்தைச் சோத்து கடைந்து சாப்பிடுவதற்கு அரைமணி நோம் முன்பாக இரண்டு கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் பசி தீபனம் உண்டாகும்.

  சள்ளைக் கடுப்பு என்னும் தேகவலி நீங்க
  சிலருக்கு உடல் முழுவதும் ஒரே வலியாக இருந்து வரும். இப்படிப்பட்டவர்கள் கீரையுடன் பிளகு, சீரகம் அரைத்துப் போட்டுப் புளிக்குழம்பு வைத்துத் தினசரி சாப்பிட்டு வந்தால் உடல்வலி குணமாகும்.

  அரைக் கீரையைச் சாப்பிடுவதன் மூலம் இருதயம் வலிமை பெறுகிறது. மூளை பலம் பெறுகிறது. மலட்டுத் தன்மையைப் போக்கும் ஆற்றலும் இக்கீரைக்கு உண்டு.

  அரைக் கீரை மலச்சிக்கலைப் போக்கிக் குடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும்.

  உடல் சூட்டைச் சமநிலைப்படுத்தும். நோயால் பாதிக்கப்பட்டு தேறியவர்களின் உடல் பலவீனத்தைப் போக்க அரைக்கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் பலவீனம் அகன்று பலம் பெறுவார்கள்.

  தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது. சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

  காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அரை கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. கடுமையான மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.

  ஜுரம், காய்ச்சல் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாகும். இந்த ஜுரம், காய்ச்சல் தீர்ந்ததும் உடலுக்கு மீண்டும் பழைய பலம் திரும்ப அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும்.

  கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டாலே கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

  குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும், அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது. அரை கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

  திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலை இருக்கும். இத்தகைய பெண்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது அரை கீரையை பக்குவம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெரும். அவற்றின் உள் தங்கியிருக்கும் நச்சுக்கள் எல்லாம் வெளியேறி சீக்கிரம் அப்பெண்களை கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும்.

  பல வகையான புற்று நோய்களில் வயிற்று புற்று நோயும் ஒன்று. இந்த புற்று நோய் வயிறு மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய குடல், கணையம் போன்றவற்றையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அரை கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது. ஏற்கனவே புற்று நோய் பாதிப்புகள் உள்ளவர்களும் அரை கீரையை அதிகம் சாப்பிட வேண்டும்.

  நகரங்களை விட கிராமங்களில் இயற்கை வளம் மாற்று மரம், செடி கொடிகள் அதிகம் இருப்பதால் பல வகையான வண்டுகள், பூச்சிகள் போன்றவை அதிகம் இருக்கின்றன. இவை சமயங்களில் சிறியவர், பெரியவர்கள் என அனைவரையும் தீண்டி விடுகிறது. இத்தகைய பூச்சிகளின் நச்சை முறிக்கும் திறன் அரை கீரை அதிகம் பெற்றுள்ளது.

  நரம்புத் தளர்ச்சி

  அரைக்கீரையில் சாறு எடுத்து, அந்தச் சாற்றில் மிளகை ஊறவைத்து பின்னர் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும், அந்த மிளகுப் பொடியில் ஐந்து சிட்டிகை அளவு எடுத்து தினமும் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

  நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும் பலனும் தரக்கூடியது. அரைக்கீரையை நாள்தோறும் உணவுடன் சேர்த்து உண்டுவர உடலுக்கு அழகும் வலுவும் கொடுக்கும். அரைக்கீரை நரம்பு தொடர்பான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

  பிடரி நரம்பு வலித்தல், மண்டை பீனிச நரம்புவலி, ஜன்னி தலைவலி, கன்னநரம்பு புடைப்பு ஆகியவைகளுக்கு இக்கீரை குணமாக்கக்கூடியது.

  இரத்த சோகை

  அரைக்கீரையில் இரும்புச் சத்து உள்ளது. அரைக்கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து தொடர்ந்து 21 நாள்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரித்து இரத்த சோகை மறையும்.

  காய்ச்சல்

  அரைக்கீரையுடன் மிளகாய் வற்றல், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும், அதில் கிடைக்கும் சாற்றை வடித்து சோற்றில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

  ஜன்னி

  அதிக காய்ச்சல் ஏற்பட்டால் சிலருக்கு வலிப்பு போன்ற ஜன்னி ஏற்படும். அரைக்கீரையுடன் சுக்கு, மிளகு , இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் போட்டுக் குடித்தால் குளிர் காய்ச்சல், ஜன்னி போன்றவை குணமாகும்.

  சளி

  அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் போட்டு தினமும் அதிகாலையில் குடித்து வந்தால் சளி, இருமல், நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.

  மலச்சிக்கல்

  அரைக் கீரையுடன் பாசிப் பயிறு, மிளகு, நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

  விந்தணு விருத்தி

  அறுகீரை அல்லது அரைக்கீரை, விந்தணுவைப் பெருக்கும் கீரைகளில் ஒன்று. அரைக்கீரையை. புளியில்லாமல் மிளகு சேர்த்து நெய் இட்டுச் சமைத்துச் சாப்பிட்டால் தாது வளரும்.

  தாய்மை

  இந்தக் கீரை உடலுக்கு வெப்பத்தைக் கொடுப்பதனால் குழந்தை பெற்ற பெண்களுக்கு ஓர் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. பிரசவித்த பெண்களுக்குச் சீதளம் வராமல், இக்கீரையில் அடங்கியுள்ள சத்துகள் பாதுகாக்கின்றன. அத்துடன் பிரசவ மெலிவைப் போக்கி உடலுக்குச் சக்தியையும் பலத்தையும், கொடுக்கின்றன. அன்றியும் இக் கீரையிலுள்ள சத்துகள் தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழந்தைக்கு நோய் அணுகாமல் தடுக்கின்றன; குழந்தைக்குப் பலத்தையும் உரத்தையும் ஊட்டி வளர்க்கும் தன்மை பெற்றது.

  அரைக்கீரை தைலம்

  அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் அரைக்கீரைத் தைலம் மிகவும் புகழ்பெற்றது. இத்தைலம் கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. தலைமுடியானது செழித்து வளர இத்தைலமும் உதவுகிறது. மேலும் தலைமுடியும் ஒளிவிட்டு மின்னும். தலைமுடி கருமையாகவும் செழிப்பாகவும் வளர்வதற்கு, அரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சிப் பதத்தில் எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தடவிவர வேண்டும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,586FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-