October 17, 2021, 9:19 pm
More

  ARTICLE - SECTIONS

  ஏன் சிவப்பு கொய்யா ஸ்பெஷல்!

  Guava - 1

  ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்திற்கு கொடுப்பதில்லை.
  கொய்யாப்பழம் நம்மூர்களில் மிகவும் சர்வ சாதரணமாக கிடைத்திடும் ஓர் பழமாக இருக்கிறது. ஒவ்வொரு பழத்தின் நிறத்திற்கு ஏற்ப அவற்றின் குண நலன்கள் மாறுபடும் ஏனென்றால் பழத்தில் இருக்கக்கூடிய தாதுக்கள், சத்துக்கள்,ஃபைட்டோ கெமிக்கல்களினால் தான் பழத்தின் நிறம் வேறுபடுகிறது.

  கொய்யாவில் மிகவும் சுவையுடையது என்றால் சிகப்பு கொய்யாவைச் சொல்லலாம். குறைவான கலோரி, அதிக நார்ச்சத்து கொண்டது

  குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது.
  இதனால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்ற பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே இருக்கிறது

  கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.

  தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.

  சர்க்கரை நோய் ஏற்பட்டாலே, அதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக் கூடாது என்று அநேக கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

  தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாவை சாப்பிடலாம். மேலும் கல்லீரலைப் பலப்படுத்த அடிக்கடி கொய்யாப்பழத்தை உண்பது நல்லது.

  கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. மேலும் முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக மாற்றுகிறது.

  கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.

  கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது.

  கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது.

  ஒரு கப் சிவப்பு கொய்யாவிலிருந்து உங்களுக்கு 20 சதவீத ஃபோலேட் கிடைத்திடும். உங்கள் உடலில் இருக்கக்கூடிய டிஎன்ஏ,ஆர்.என்.ஏ மற்றும் புதிய செல்களுக்கு ஃபோலேட் மிகவும் அவசியமாகும்.

  உங்கள் உடலில் போதுமான அளவு ஃபோலேட் கிடைக்கவில்லை என்றால் மெகலோப்ளாஸ்டிக் அனீமியா எனப்படுகிற குறைபாடு ஏற்படக்கூடும் அதோடு உங்களது சருமம்,தலைமுடி, நகங்கள் ஆகியவை பாதிக்கப்படும். ஃபோலேட் பெண்களின் தாய்மை பேருக்கும் முக்கிய பங்காற்றுகிறது.

  ஒரு கொய்யாப்பழத்திலிருந்து 230 மில்லிகிராம் பொட்டாசியம் கிடைத்திடும். தினமும் கொய்யாப்பழத்தை எடுத்துக் கொள்வது அதைத்தாண்டி பொட்டாசியம் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது ஆகியவற்றினால் ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவைப்படும் அளவினை எளிதாக எட்ட முடியும். ஒரு நாளைக்கு உங்களுக்கு 4,700 மில்லிகிராம் அளவு பொட்டாசியம் தேவைப்படுகிறது.

  ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உங்களுக்கு மூன்று கிராம் அளவு ஃபைபர் கிடைத்திட வாய்ப்புண்டு. ஒரு நாளைக்கு பெண்களாக இருந்தால் உங்களுக்கு 25 கிராம் ஃபைபரும், ஆண்களாக இருந்தால் 38 கிராம் ஃபைபரும் அவசியமாகும்.

  சிவப்பு கொய்யாவில் விட்டமின் பி3 மற்றும் விட்டமின் பி6 இருக்கும். இதனை நியாசின் மற்றும் பைரிடாக்சின் என்று குறிப்பிடுவார்கள். இது மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் இதனால் தலைவலி, டென்ஷன் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும்

  நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும். இதனால் வைரஸ் தொற்றுகளினால் உங்களுக்கு ஏற்படக்கூடிய காய்ச்சல், இருமல், சளித்தொல்லை ஆகியவற்றிலிருந்து எளிதாக தப்பிக்க முடியும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,561FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-