September 28, 2021, 12:42 pm
More

  ARTICLE - SECTIONS

  கட்டுக்கடங்கா நன்மைகள்: (காலா நமக்) கருப்பு உப்பு!

  black salt - 1

  நம் உண்ணும் உணவில் சுவையை தரக்கூடியது உப்பு தான். உப்பு சுவையை மட்டுமல்ல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக் கூடியது. அந்த வகையில் கருப்பு உப்பை உணவில் சேர்த்தாலே சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.

  சாதாரண சோடியம் உப்பை விட கருப்பு உப்பு உடலுக்கு மிகவுமு் ஆரோக்கியம் நிறைந்தது.

  உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள் அது போல உப்பை இல்லாத உடம்பும் குப்பை தான். காரணம் உப்புச் சத்தும் நம் உடம்பிற்கு அவசியம். போதுமான உப்புச் சத்து இருந்தால் நம் உடம்பில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் எல்லாம் சமநிலையில் இருக்கும். உப்பில் பல வகைகள் உண்டு தூள் உப்பு, கல் உப்பு, இந்துப்பு, கருப்பு உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.

  இதில் கல் உப்பும், தூள் உப்பும் சமையலில் அதிகமாக பயன்படுத்துவோம். ஆனால் கருப்பு உப்பு பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. உண்மையில் இந்த கருப்பு உப்பில் தான் ஏராளமான தாதுக்கள், விட்டமின்கள் அடங்கியுள்ளன. இந்த தம்மா துண்டு உப்பை சமையலில் சேர்க்கும் போது ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்கிறது ஆயுர்வேதம். நமது சீரண சக்தியிலிருந்து எடை இழப்பு வரை இந்த கருப்பு உப்பிற்கு அத்துப்படி.

  சோடியம் குளோரைடு, சோடியம் பைசல்பைட், சோடியம் சல்பைட், இரும்பு சல்பைட், சோடியம் சல்பேட், சோடியம் பைசல்பேட் மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வடிவங்களில் காணப்படுகிறது.

  வேறு விதமான பெயர்கள்

  கலா நமக் (இந்தி), சைந்தவ் மீத்(மராத்தி), இந்துப்பு (தமிழ்), கருத்தா உப்பு (மலையாளம்), நல்ல உப்பு(தெலுங்கு), பெரே (கன்னடம்),சஞ்சார் (குஜராத்தி), மற்றும் கலா லூன் (பஞ்சாபி) போன்ற பெயர்களில் வழங்கப்படுகின்றன

  கருப்பு உப்பு அல்லது இமயமலை கருப்பு உப்பு என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறது. இளஞ்சிவப்பு-சாம்பல் எரிமலை கல் உப்பு ஆனது இந்தியாவில் எளிதில் கிடைக்க கூடிய உப்பாகும் . இந்த கருப்பு உப்பின் சுவை மண் போன்று இருக்கும். சாலட், பாஸ்தாவை அழகுபடுத்த, இந்திய சமையல்களில் சுவையூட்ட இவைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

  கருப்பு உப்பு ஊட்டச்சத்துக்கள்

  இந்த கருப்பு உப்பில் இரும்புச் சத்து, பொட்டாசியம் மற்றும் இதர மினரல்கள் காணப்படுகின்றன. மேலும் இதிலுள்ள கந்தக தனிமத்தால் இது வேக வைத்த முட்டையை போன்ற சுவையை கொடுக்கக் கூடியது. பார்ப்பதற்கு கருப்பு நிற படிகங்களாக இருக்கும்.

  சீரண பிரச்சனைகளை களைவதில் கருப்பு உப்பிற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. இதன் அல்கலைன் தன்மை வயிற்று பிரச்சினைகளை மலச்சிக்கல் மற்றும் வீக்கம் இல்லாமல் சுலபமாக களைந்து விடும். எதுக்களித்தல், வயிறு பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்யும். இதில் சோடியம் குளோரைடு, சல்பேட், இரும்பு, மாங்கனீசு, ஃபெரிக் ஆக்சைடு ஆகியவைகள் உள்ளன. இந்த தனிமங்கள் வயிற்றில் வாயுத் தொல்லை வராமல் காக்கிறது.

  டிப்ஸ்

  நல்லா வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் 1/2 ஸ்பூன் கருப்பு உப்பு எடுத்து சாதாரண நீரில் கலந்து குடியுங்கள். அஜீரணக்கோளாறுகள் சரியாகி விடும்.

  நம் உடம்பில் தசைகள் ஒவ்வொன்றும் இயங்க பொட்டாசியம் அவசியம். இந்த தசைகள் ஒழுங்காக இயங்காத போது பிடிப்பு உண்டாகிறது. கருப்பு உப்பு இப்படி உடம்பில் ஏற்படும் தசைப்பிடிப்பை நீக்க வல்லது. மேலும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்கள் குடல் உறிஞ்சிக் கொள்ள இது உதவுகிறது.

  டிப்ஸ்

  எனவே தசைப்பிடிப்பு இருப்பவர்கள் தினமும் பயன்படுத்தும் உப்பிற்கு பதிலாக கருப்பு உப்பை பயன்படுத்தலாம்.
  டயாபெட்டீஸ் நோயாளிகள் சாதாரண உப்பிற்கு பதிலாக கருப்பு உப்பை பயன்படுத்துங்கள். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு உதவி செய்கிறது.

  டிப்ஸ்கள்

  ஒரு கிளாஸ் டம்ளரில் கருப்பு உப்பு சேர்த்து நன்றாக கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இது உடம்பில் உள்ள நச்சுக்களை எல்லாம் வெளியேற்றி இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க உதவுகிறது

  இது சோடியம் அளவை குறைத்து இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க, இரத்தம் உறைவதை தடுக்க என எல்லாவற்றிற்கும் மருந்தாக செயல்படுகிறது.

  டிப்ஸ்

  கடல் உப்பு, பாறை உப்பு, பூண்டு உப்பு போன்றவற்றில் சோடியம் அதிகமாக உள்ளது. எனவே இரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம்.

  கால் வலி மூட்டு வலி என்றால் நம் பாட்டிமார்கள் வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுப்பார்கள். மூலிகை இலைகளை பறித்து செய்வார்கள். அதே போன்று மூட்டு வலியை போக்க கருப்பு உப்பை லேசாக சூடாக்கி ஒரு துணியில் வைத்து கட்டி மூட்டு பிரச்சனை இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுங்கள். ரொம்பவும் சூடேற்றி வேண்டாம். அதே மாதிரி அழுத்தியும் ஒத்தடம் கொடுக்காமல் 10 – 15 நிமிடங்கள் லேசாக செய்யுங்கள்.

  குறிப்பு

  இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வரும் போது மூட்டுவலி பிரச்சனைகள் தீரும்.

  கருப்பு உப்பில் உள்ள லிப்பி டுகள், என்சைம்கள் நமது எடையை குறைக்க உதவுகிறது. கருப்பு உப்பு குடல் இயக்கத்திற்கு துணை புரிகிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்று வீக்கத்தை எதிர்த்து போரிடுகிறது. தடுக்கிறது.

  டிப்ஸ்

  கருப்பு உப்பை உணவிில் சேர்த்து வந்தால் உடல் எடையை கட்்டுக்குள வைக்க முடியும்.

  அழற்சி, தும்மல், சலதோஷம், சுவாச பாதை பிரச்சினைகள், ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனைகள் இப்படி எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு இந்த கருப்பு உப்பு போதும்.

  டிப்ஸ்கள்

  நீங்க மூக்கை உறிஞ்சும் இன்குலரில் சிறுதளவு கருப்பு உப்பு போட்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை என பயன்படுத்தி வாருங்கள். இவை உங்க சுவாச பாதை ஆரோக்கியமாக இருக்க உதவும்.

  அதிக கொலஸ்ட்ரால் கொண்ட நபர்கள் டயட்டில் கருப்பு உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இது இரத்த அடர்த்தியை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

  டிப்ஸ்கள்

  சிறிதளவு கருப்பு உப்பை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.

  கருப்பு உப்பு நம் குடலில் சுரக்கும் அமில தன்மையை சமநிலையில் வைக்கிறது. அமிலத்தன்மை அதிகமாகும் போது தான் நெஞ்செரிச்சல் ஏற்படும். மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்றவை குணமாகும்.

  டிப்ஸ்கள்

  கருப்பு உப்பை உங்க சாலட் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

  மனித உடலில் 1/4 பங்கு உப்பு எலும்புகளில் காணப்படுகிறது. எலும்பின் வலிமையை அதிகரிக்க கால்சியம் அவசியம். இதை கருப்பு உப்பில் பெறலாம். இது கீழ்வாத பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. இது தூக்கத்தால் ஏற்படுகின்ற வாதப் பிரச்சினைகளையும் போக்கக் கூடியது ஆற்றல் கொண்டது.

  டிப்ஸ்கள்

  எனவே ஆஸ்ட்ரியோபோரோஸிஸ் பிரச்சனை இருப்பவர்கள் நிறைய தண்ணீர் மற்றும் கருப்பு உப்பு உணவில் சேர்த்து வாருங்கள். இந்த பிரச்சினையை துரத்தி விடலாம்.

  தினமும், தக்காளி சாறில், கருப்பு உப்பு கலந்து குடித்து வந்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம். குளிக்கும் நீரில் கருப்பு உப்பைக் கலந்து குளித்தால், சருமத்தில் வெடிப்புகள் விழாமல், வழவழப்பாக இருக்கும்.

  கால் பாதங்கள் வீங்கி, வெடிப்புக்கள் இருந்தால், சிறிது கருப்பு உப்பை, வெந்நீரில் கலந்து, பாத்திரத்தில் நிரப்பி, பாதத்தினை நீருக்குள் மூழ்கினாற்போல் வைத்திருந்தால், வீக்கமும் குறையும். வெடிப்புக்களும் மறையும்.

  மூக்கு அடைப்பு மற்றும் தொண்டை புண் காரணமாக சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவிக்கிறீர்களா. உங்களுக்கு கருப்பு உப்பு நல்ல பலனை தரும். சளி , சைனஸ், ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கருப்பு உப்பை ஆவி பிடிப்பதால் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலருக்கு பயனளிக்கிறது.

  மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் எலுமிச்சை மற்றும் இஞ்சியுடன் சிறிது கருப்பு உப்பு கலந்து குடித்தால் போதும். இது ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு நல்ல பலனை தரும்.

  நெஞ்செரிச்சலை குணமாக்கும் தன்மை கொண்டது கருப்பு உப்பு. கருப்பு உப்பில் உள்ள காரத்தன்மை வயிற்றில் உள்ள அமில உற்பத்தியை சமப்படுத்தச் செய்கிறது, இதனால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

  கொலஸ்ட்ரால்
  கருப்பு உப்பு கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. வழக்கமான கடல் உப்புக்கு பதிலாக கருப்பு உப்பை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை ஒரே சீராக வைத்திருக்கும். கருப்பு உப்பு இரத்தத்தை உடல் முழுவதும் ஒரே சீரான அளவில் செல்வதற்கு உதவிபுரிகிறது. இதனால் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் குறைகிறது.

  தசை பிடிப்பை குணமாக்குகிறது
  கருப்பு உப்பு கை மற்றும் கால்களில் ஏற்படக்கூடிய தசை பிடிப்பை போக்க உதவுகிறது. ஏனென்றால் இதில் பொட்டாசியம் உள்ளது, இது நமது தசைகள் சரியாக இயங்குவதற்கு அவசியம். இது உடலில் இந்த குறிப்பிட்ட கனிமத்தை சரியான முறையில் உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. எனவே நீங்கள் வழக்கமான உப்பைதவிர்த்து கருப்பு உப்பை பயன்படுத்தும் பொழுது இது தசை வலிகள் மற்றும் தசை பிடிப்புகளைத் தடுக்க உதவும்

  மனஅழுத்தத்தை தடுக்கிறது
  கருப்பு உப்பு பல வகையான மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தக்தை போக்க சிகிச்சையளிக்க உதவும். அமைதியான மற்றும் தடையற்ற நிம்மதியான நீண்ட தூக்கத்திற்கு அவசியமான மெலடோனின் மற்றும் செரோடோனின் ஆகிய இரண்டு ஹார்மோன்களை தூண்டி

  நிம்மதியான தூக்கத்தை பெற இது உதவுகிறது. சரியான தூக்கம் மனஅழுத்தம் மற்றும் மனசோர்வை நீக்கி உங்களை புத்துணர்வாக்குகிறது.

  குழந்தைகளுக்கு நல்லது
  குழந்தைகளுக்கு கருப்பு உப்பு சிறந்தது. இது குழந்தைகளுக்கு அஜீரணம் மற்றும் கபம் உறைதல் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. செரிமான பிரச்சினைகள் மற்றும் இரைப்பை தொல்லைகளைத் தடுக்க குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் சிறிது கருப்பு உப்பு சேர்த்து கொடுங்கள்.

  கருப்பு உப்பு கார பண்புகளைக் கொண்டுள்ளது, இது வயிற்றில் அதிகப்படியான அமிலத்தைக் குறைக்க உதவுகிறது, அதே நேரத்தில் அதன் உயர் தாதுப்பொருள் அமில ரிஃப்ளக்ஸ் காரணமாக ஏற்படும் சேதத்தை குறைக்கிறது.
  துளைகளில் குவிந்துள்ள அழுக்கு மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற கருப்பு உப்பின் துகள்கள் ஒரு உடல் உறிஞ்சியாக செயல்படுகின்றன. இது உங்கள் சருமம் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவி செய்கிறது.

  ஒரு நல்ல தூளாக தரையில் இருக்கும்போது ஒரு இளஞ்சிவப்பு நிறத்தை எடுக்கும். இது ஒரு தனித்துவமான சல்பரஸ் கூறுகளைக் கொண்டுள்ளது, இது வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவுடன் அடிக்கடி ஒப்பிடப்படுகிறது ஆரோக்கியமானது.

  ஆயுர்வேதத்தின் படி, கருப்பு உப்பு ஒரு குளிரூட்டும் உப்பு மற்றும் மிகவும் பயனுள்ள உப்பு என்று கருதப்படுகிறது.

  உங்கள் குழந்தையின் உணவில் உப்பு சேர்க்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகளுக்கு மிகக் குறைந்த அளவு உப்பு மட்டுமே தேவைப்படுகிறது: ஒரு நாளைக்கு 1 கிராம் (0.4 கிராம் சோடியம்) வரையே கொடுக்க வேண்டும். உங்கள் சிறு குழந்தையின் சிறுநீரகங்கள் இதை விட அதிகமான உப்பை சமாளிக்க முடியாது. அதனால் அதனை வெள்ளை உப்பிற்கு மாற்றாக கருப்பு உப்பு பயன்படுத்தலாம். மருத்துவர் அறிவுரை வேண்டும்.

  உங்கள் துளைகளில் குவிந்துள்ள அழுக்கு மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற கருப்பு உப்பின் துகள்கள் ஒரு உடல் உறிஞ்சியாக செயல்படுகின்றன. இது உங்கள் சருமம் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவி செய்கிறது.
  எனவே கருப்பு உப்பினை நல்ல ஸ்க்ரப் போல பயன்படுத்தலாம்.

  கருப்பு உப்பு பொதுவாக சமையலில் ஒரு சுவையூட்டும் முகவராக பயன்படுத்தப்படுகிறது. கருப்பு உப்பின் அதிகபட்ச நன்மைகளை அறுவடை செய்ய, அதை சாதா உப்புடன் சம விகிதத்தில் கலந்து உங்கள் உணவுகளில் பயன்படுத்தவும். உணவுப் பொருட்களை சேமிக்கவும் பதப்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம்.
  உப்பு, பல மசாலாப் பொருள்களைப் போலவே, காலாவதி தேதிக்கு முன்பே சிறந்ததாக இருக்கலாம், ஆனால் கருப்பு உப்பில் காலாவதி தேதி இல்லை. உங்கள் சுவையூட்டும் தேவைகளுக்காக தூள் உப்பு அல்லது கல் உப்பை நீங்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம். மேலும் ராக், பிக்லிங் மற்றும் பாத் உப்புகள் போன்ற பிற வகை உப்புகளையும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம்.

  கருப்பு உப்பினை காற்று புகாத பாத்திரத்தில் வைப்பது நீண்ட காலம் நிலைக்க வழி வகுக்கும். பீங்கான் பாத்திரங்கள் சிறப்பான பலனைத் தரும்.
  சில பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது அதிக சல்பேட் உள்ளடக்கம் காரணமாக கர்ப்ப காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இது கர்ப்பிணிப் பெண்களில் உயர் இரத்த அழுத்தத்திற்கும் வழிவகுக்கும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-