
அன்னாசி அச்சு இனிப்பு
தேவையானவை:
அன்னாசிபழச் சாறு – 50 மில்லி,
பால் பவுடர் – 5 டேபிள்ஸ்பூன்,
பைனாப்பிள் ஆயில் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன், ஐசிங் சுகர் – 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
பால் பவுடர், ஐசிங் சுகரை சலித்துக் கொண்டு… அவற்றுடன் பைனாப்பிள் ஆயில், அன்னாசி பழச்சாறு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். சாக்லேட் அச்சு அல்லது பிஸ்கட் கட்டர் உதவியுடன் விருப்பமான வடிவம் கொடுத்து, ஃப்ரிட்ஜில் முக்கால் மணி நேரம் வைத்து எடுத்தால்… அசத்தலான சுவையில் அன்னாசி அச்சு இனிப்பு ரெடி.