
திமிர்ப் பூச்சிகள் வெளியேற…
வேலிப் பருத்தியின் (உத்தாமணி) வேரைக் கொண்டு வந்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு 2 அல்லது 3 சிட்டிகையளவு பாலில் கலந்து உள்ளுக்குக் கொடுக்க வாய்வுத் தொல்லை நீங்கி பேதியாகும். வயிற்றிலுள்ள திமிர்ப் பூச்சிகளும் வெளியாகும்.
தும்மல் நிற்க…
சளி பிடித்துக் கொண்டு தும்மல் தும்மலாக வந்தால் கொஞ்சம் மிளகையெடுத்துப் பொடி செய்து மெல்லிய துணியில் முடிச்சாகக் கட்டி அதிகாலையில் குளித்தவுடன் தலையுச்சியில் 5 நிமிடம் தேய்த்து வர இரண்டு நாள்களில் சரியாகி விடும்.
தூக்கமின்மைக்கு…
வெங்காயத்தை நசுக்கி ஒரு துணியில் முடிந்து கண்ணில் ஒரு சொட்டு பிழியவும். சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொரித்து ஒரு மெல்லிய துணியில் முடிந்து அவ்வப்போது முகர்ந்து வர நல்ல தூக்கம் வந்து விடும்.
தேள் கடிக்கு…
தேள் கொட்டியவுடன் ஒரு பிடி துளசியை நன்றாக மென்று தின்று விட்டு கொட்டின இடத்தில் சிறிது வைத்துத் தேய்க்க உடனே வலி பறந்து விடும்.
தேள் கொட்டிய இடத்தில் எருக்கம் பாவை வைத்தால் உபாதை குறையும்.
மரத்திலிருந்து மாங்காயைப் பறித்ததும் பால் வருமல்லவா? அதை சேகரித்து ஒரு சிறு புட்டியில் வைத்திருங்கள் தேள் கொட்டி விட்டால் கொட்டு வாயில் தடவ உடனே வலி நீங்கி விடும்.
வேப்பிலையை சட்டியில் போட்டு வதக்குங்கள். நன்றாய் தீ வைத்தால் வேப்பிலை புகையும். அந்த புகையை தேள் கொட்டிய இடத்தில் படும்படி காட்டுங்கள். கொஞ்ச நேரத்திலேயே விஷம் இறங்கி விடும்.
கொஞ்சம் மிளகாயைப் பொடி செய்து இரண்டு வெற்றிலைகளில் அதை வைத்து மடித்து வாயில் போட்டு நற நறவென்று மென்று தின்ன விஷம் போன இடம் தெரியாது.
கிராமபோன் தட்டை உடைத்து தண்ணீரில் உரைத்து வழித்து தேள் கடித்த இடத்தில் தடவ உடனே கடுகடுப்பு நீங்கும்.
நிறைய உப்புப் போட்டுக் கரைத்து வடிகட்டி இடப்பக்கம் கடித்தால் வலக்கண்ணிலும், வலப்பக்கம் கடித்தால் இடக்கண்ணிலும் இரண்டு சொட்டு விட உடனே கொட்டு வலி நிற்கும்.
சுண்டைக்காயளவு சுண்ணாம்பு. பழம்புளி இரண்டையும் மசிக்க சூடாகும். சூட்டுடன் தேள் கடி வாயில் வைத்து அழுத்த கடுகடுப்பு குறையும்.
தொண்டைக் கட்டு நீங்க…
ஆடாதொடை இலையை நெருப்பிலிட்டு சற்று வதங்கச் செய்து சாறு பிழிந்து கொள்ள வேண்டும். அதில் தேனையும் கலந்து மூன்று வேளை சாப்பிட்டால் போதும் தொண்டைக் கட்டு நீங்கும்.
தொண்டைக் கரகரப்பையும் குரல் கம்மலையும் போக்க நன்றாகத் தூள் செய்த திப்பிலியில் ஆறு கிரெய்ன் வரை இரண்டு மூன்று வேளை தேனோடு சேர்த்து சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும். இதை சாதாரண இருமலுக்கும் கொடுக்கலாம். நீண்ட நாள்கள் உபயோகித்து வர ஆஸ்துமா நோயும் குணமடையும்.
குப்பைமேனி இலைச் சாற்றுடன் சிறிது சுண்ணாம்பைச் சேர்த்துக் குழைத்து தொண்டையின் மேல் பற்றிட இரண்டொரு நாளில் குணம் தெரியும்.
கற்பூர வல்லி இலைச் சாறு அரை அவுன்ஸ் எடுத்து சிறு கோரோசனை மாத்திரையை நசுக்கிக் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர தொண்டைக்கம்மல் நீங்கும்.
தொண்டைக் கம்மல், குடல் வாதம், மூலரோகம் உள்ளவர்கள் முள்ளங்கிக் கிழங்கைச் சமைத்துச் சாப்பிட நோய் அகலும்.