கறிவேப்பிலை துவையல் சாதம்
தேவையான பொருட்கள்
சாதம் – 1கப்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
புளி – ஒரு சிறு உருண்டை
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுந்து – அரை தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கறிவேப்பிலையை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அதில் அரைத்த கறிவேப்பிலை விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
சாப்பிடும் போது துவையலை சாதத்துடன் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான கறிவேப்பிலை துவையல் சாதம் ரெடி.