பிசின் அரிசி சாதம்
தேவையான பொருட்கள்
பிசின்அரிசி(புட்டரிசி) – 2 கப்
தேங்காய்த்துருவல் – 2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலப்பொடி – 1 சிட்டிகை
நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை
பிசின் அரிசியை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் ஒரு துணியில் பரப்பி, இட்லிபானையில் வேக விடவும்.
நன்கு வெந்ததும் சற்று ஆற விடவும். ஓரளவு ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்
சர்க்கரை, ஏலப்பொடி, தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து பிசைந்து, பிசின் அரிசியை சேர்த்துக்கலந்து சாப்பிடவும்.
பிசின் அரிசி சாதம் 2
தேவையான பொருட்கள்
பிசின் அரிசி – 2 கப்
மில்க்மெயிட் – 1/4 டின்
பால் – 2 கப்
ஏலப்பொடி – 1 பின்ச்
லெமன்யெல்லோ கலர் – 1 பின்ச்
நெய் – 1 டீஸ்பூன்
முந்திரி – 10
திராட்ச்சை – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
பிசின் அரிசியை முதல் நாளிரவே ஊறவிடவும்
இதில் இரண்டு டம்ளர் பால், மேலும் இரண்டு டம்ளர் நீர், கலர்பொடி சேர்த்து குக்கரில் வேக விடவும்.
ஓரளவு மசியாவிட்டால், மேலும் சிறிது நீர்சேர்த்து வேக வைக்கலாம்.
இறக்கியதும் மில்க்மெயிட், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து சிறிய பவுல்களில் சர்வ் பண்ணவும்