அயோத்யா: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நேபாளத்தில் இருந்து அயோத்யா வந்த முதல் பேருந்தை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
நேபாளத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கே சீதை பிறந்த இடமான ஜனகபுரியில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு, சீதை பிறந்த இடத்தில் இருந்து ராமன் பிறந்த இடமான அயோத்திக்கு ஒரு பஸ் சர்வீஸை துவக்கி வைத்தார்.
பாரத- நேபாள மக்களை கலாசார ரீதியாக ஒருங்கிணைக்கும் ஓர் அம்சமாக இந்த பஸ் சேவை துவங்கப் பட்டுள்ளது. அதன்படி, சீதை பிறந்த ஜனகபுரியில் இருந்து நேற்று பஸ் சேவையை மோடி துவக்கி வைத்து வழியனுப்பினார்.
ராமன் பிறந்த அயோத்திக்கு இன்று காலை வந்து சேர்ந்த அந்த பஸ்ஸை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதற்கான பிரமாண்ட விழா அயோத்தியில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் சாதுக்கள் சந்நியாசிகள், பெரியவர்கள் திரளான பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
#UPCM श्री #YogiAdityanath द्वारा अयोध्या में जनकपुर-अयोध्या बस सेवा का स्वागत। https://t.co/8KBpkJLmKL
— CM Office, GoUP (@CMOfficeUP) May 12, 2018





