கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில், வெயிலையும் பொருட்படுத்தாமல் தென் கன்னடத்தில் பலரும் வாக்களித்தனர்.
இந்த கர்நாடகத் தேர்தல் வாக்குப் பதிவின்போது, எத்தனையோ பேர் விதவிதமான வகையில் வந்து வாக்குகளைஅளித்தனர். அவர்களில் வித்தியாசமான முறையில், நித்யானந்தா தனது ஆதரவாளர்களுடன் வந்து வாக்குகளைப் பதிவு செய்தார். அவர், ராமநகர் மாவட்டம், மாகடி சட்டமன்ற தொகுதி பிடதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
வாக்களித்துவிட்டு வெளியில் வந்த நித்தியானந்தா, சிரித்துக் கொண்டே மையிட்ட விரலைக் காட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.




