
–கவிஞர் கண்ணன் திருமலை ஐயங்கார்–
புவியழகா! வாய்திறவாய்
யசோதை கேட்டாள்; அதில்
ரவிநிலவு இன்னும்பிற
உலகுகண்டாள்!
மதிசெறிந்த சனாதனம்
அவனின் பூமி- இன்று
புவிவியக்கும் செயலென்னி
வந்தான் கண்ணன். (1)
கொடிதன்னில் நிலவெழுதி
பார்ப்பார் முன்னம், – நமது
கொடியுயர்த்தி நிலவில்நட்டு
மகிழ்ந்தோமின்று!
முடிதன்னில் பீலிபையின்
சிறகுடைதேவன்’;
கடிகையிலே வியந்தபடி
வந்தான் கண்ணன்! (2)
அயோத்தியில் அமையவுள்ள
ஆலயம் காண- இன்று
அவனியிலே பாரதத்தின்
ஏற்றம் காண
கயா, காசி மதுராவின்
மீட்பைக் காண
கங்கையமுனை நடைகாண
வந்தான் கண்ணன்!! (3)
ப”வென்னின் மேன்மைதரும்
ஞானத்திரளாம்!
ரத”என்றால் ருஷிமுனிவர்
வழிகாட்டுதலாம்!!
“பரத”தான் “பாரத்” என
ஆனபோதும் -அதை
பதிவுசெய்ய மறுபடியும்
வந்தான் கண்ணன்!! (4)
நிலவுதனில் சனாதன
குடிகள் செய்ய-பக்க
செவ்வாயில் நீரெடுத்து
வணிகம் கொள்ள
வளசூர்யன் மடிபடுத்து
ஆய்வுகள் உய்ய
நலந்தரவும் துணைவரவும்
வந்தான் கண்ணன்!! (5)
தேங்குழலும் லட்டும்நறு
திரட்டிப்பாலும்-மெது
சீடையுடன் தட்டை,புது
நவநீதமும்
பாங்குடனே கீதைசெப்பி
இலையில் வைத்தோம்.
பாந்தமுடன் ஸ்வீகரிக்க
வந்தான் கண்ணன்!! (6)