
தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 98 என்றும், அவர்களில் 91 பேர், ஒரே தனித் தொற்று மூலம் பாதிக்கப் பட்டவர்கள் என்றும் கூறினார் சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்.
தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை கொரொனா பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை, 1075இல் இருந்து, 1173 என அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
இன்று 98 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டது என்பதுடன், அவர்களில் 91 பேர், ஒரே தனித்தொற்று (தில்லி, தப்ளிக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்) மூலம் பாதிக்கப் பட்டவர்கள் என்றும், மீதமுள்ள 7 பேர், ஏற்கெனவே பாஸிட்டிவ் முடிவுகள் வந்தவர்களிடம் இருந்து காண்டாக்ட் ஏற்பட்டதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்கள் என்றும், அவர்களில் 3 பேர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என்றும் கூறினார் பீலா ராஜேஷ்.
இன்று புதிதாக எவரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. இன்று ஒருநாளில் 8 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை, மொத்தம் 58 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று கூறினார் பீலா ராஜேஷ்