
சேமியா பகளாபாத்
தேவையானவை:
சேமியா – ஒரு கப்,
தயிர் (புளிக்காதது) – முக்கால் கப்,
பால் – அரை கப்,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – சிறிய துண்டு,
கடுகு, உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
வெறும் கடாயில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சூடானதும் வறுத்த சேமியாவைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி, அதனை ஆறவிடவும். ஆறியதும் தயிர், உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில், எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் சேர்த்துக் கலக்கவும். பிறகு பாலை தளர சேர்த்துக் கலக்கவும். நிறைவாக கொத்தமல்லி சேர்க்கவும்.
கூடுதல் சுவைக்காக… திராட்சை, மாதுளை முத்துக்கள், ஆப்பிள் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.