தெருவை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த அமைச்சர் தம்பதி!வைரலான போட்டோ!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
minister cleaning1 - 2026

வீதியைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த அமைச்சர் தம்பதி… போட்டோ வைரல் ஆனது.

நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நம் சுற்றுச்சூழலும் சுற்றுப்புறமும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் தேவை. கர்நாடக அமைச்சர் எஸ் சுரேஷ்குமார் வீதி சுத்தமாக இருப்பது எத்தனை தேவை என்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.

பெங்களூரில் உள்ள தன் வீட்டின் அருகில் இருக்கும் குப்பை கூளங்களை கவனித்த எஸ் சுரேஷ்குமார் தன் மனைவியோடு சேர்ந்து அந்த குப்பைகளை பெருக்கினார்.

minister cleaning - 2026

அமைச்சர் சுரேஷ்குமார் தம்பதிகள் வீதியை சுத்தம் செய்யும் போட்டோக்களை பெங்களூரு மகாநகர பாலக சமஸ்த கமிஷனர் BBMP பிஹெச் அனில்குமார் டிவிட்டர் மூலம் ஷேர் செய்துள்ளார்.

உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சமுதாயத்திற்கு மிகச்சிறந்த கருத்தை அளித்துள்ள அமைச்சர் சுரேஷ்குமார் தம்பதிகளுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.