கேடு விளைவிக்கும் ரசாயனம்..! சர்ச்சைக்கு உள்ளான ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு!

இந்தியா சற்றுமுன் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

johnsons shampoo - 2026ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டுமென அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

குழந்தைகளுக்கான சோப், பவுடர், ஷாம்பு உள்ளிட்ட தயாரிப்புகளில் முன்னணியில் இருக்கிறது அமெரிக் காவைச் சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் புற்றுநோயை உண் டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்ப தாக பல காலமாகவே கூறப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜான்சன் & ஜான்சன்’ஸ் ஷாம்புகள் வைக்கப் பட்டிருந்த குடோன்களில் அண்மையில் திடீரென சோதனை நடத்தினர்.

ஃபார்மால்டிஹைடு எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் இந்த ஷாம்புவில் இருப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து அந்த சோதனை நடத்தப்பட்டது.

சில ஜான்சன் & ஜான்சன்’ஸ் ஷாம்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை தர ஆய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வுகளின் முடிவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக, கடந்த மார்ச் 5ஆம் தேதி ராஜஸ்தான் மருந்து தரக் கட்டுப்பாடு அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், தர நிர்ணய ஆய்வில் தோல்வி அடைந்த பொருட்கள் சிலவற்றின் பட்டியலை வெளியிட்டிருந்தனர். அதில் ஜான்சன் & ஜான்சன்’ஸ் பேபி ஷாம்பு பொருட்கள் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்ட சோதனைகளில் தோல்வி அடைந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்  ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டுமென அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

பேபி ஷாம்புவில் அஸ்பெஸ்டாஸ் உள்ளிட்டவை கலந்திருப்பது சோதனையில் தெரிந்ததால் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தல் தொடர்பாக தங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை என்று ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜான்சன் & ஜான்சன் தரப்பு கூறியபோது, “இதுபோன்ற இடைக்கால சோதனை முடிவுகளை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இவை என்னவென்று தெரியாத, முறையற்ற சோதனைகளின் மூலம் கிடைத்த முடிவாக இருக்கலாம். எனவே மத்திய மருந்து கட்டுப்பாட்டு சோதனை ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்த பிறகு வரும் முடிவுகளுக்குப் பிறகே நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம்” என்று கூறியுள்ளது.

இந்நிலையில், பேபி ஷாம்பு போல, ஜான்சன் & ஜான்சன் டால்கம் பவுடரையும் தர நிர்ணய சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்.

1 thought on “கேடு விளைவிக்கும் ரசாயனம்..! சர்ச்சைக்கு உள்ளான ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு!”

  1. இப்போது தடை, பிற்பாடு தடை நீக்கம். என மக்களை குழப்பும் முடிவுகள் மாற வேண்டும். மக்களுக்கு தீங்கு என்று தெரிந்தால் எந்த ஒரு பொருளையும் நிரந்தர தடை செய்வதே நல்லது, பாரா பட்சமின்றி அரசு செயல்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.