இன்று பிறந்த நாள் காண்கிறார் திரை நாயகி சமந்தா. அவருக்கு ரசிகர்கள் டிவிட்டரில் வாழ்த்து மழையாகக் குவித்து வருகிறார்
திரை நாயகி சமந்தாவின் பிறந்த தினம் இன்று. அவர் தனது 32ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் சமூகவலைத் தளங்களில் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
விண்ணைத்தாண்டி வருவாயா- படத்தின் மூலம் 2010இல் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானவர்! இவரின் குடும்பப் பாங்கான முகத் தோற்றம், தமிழ் ரசிகர்களை வசீகரித்தது.
தொடர்ந்து தமிழின் முன்னணி நாயகர்கள் சூர்யா, தனுஷ், விஜய் என ஒரு ரவுண்டு வந்துவிட்டார். தனுஷுடன் தங்கமகன், விஜயுடன் தெறி, மெர்சல், சூர்யாவுடன் 24 என பல படங்களில் வந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டார்.
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றவர்.
அண்மையில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் பாத்திரம் விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் இவரது துணிச்சல் மிக்க நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தன.
அடிக்கடி திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வரும் சமந்தா, ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தி வணங்கி வருவார். இன்று அவரது பிறந்த நாள் என்பதால், ரசிகர்கள் வாழ்த்து டிவிட்டரில் களை கட்டி வருகிறது.




