December 6, 2025, 4:57 AM
24.9 C
Chennai

நான் வேறு வேலை செய்யப் போகலாமா? வாராணசியில் கேட்டவர் மோடி!

modi in kashi - 2025

பிரதமர் மோடி, வாராணசியில் தொண்டர்களிடம் ஒரு கேள்வியைக்  கேட்டார். அத்துடன் அவர்களுக்கு ஆறு கட்டளைகளையும் பிறப்பித்தார்.

வாரணாசியில் பிரதமர் மோடி பேசிய பேச்சு…

ஒரு நாட்டின் ஜனநாயகம் நன்றாக உள்ளது என்பது, அங்கு நடக்கும் அமைதியான, அதிகபட்ச, அனைத்துத் தரப்பினரும் அளிக்கும் வாக்குப் பதிவைப் பொறுத்தே உள்ளது.

இதுவரை மக்கள் 5 வருடத்திற்க்கு ஒரு முறை வாக்களித்து விட்டு ஏதாவது செய்வார்களா என்று பார்த்து கொண்டிருந்தனர். 2014ல் வாக்களித்தவர்கள் முதன் முறையாக அரசு என்ன செய்கிறது என்பதை கண்கூடாக பார்த்தார்கள்.

இதுவரை கட்சி தொண்டர்கள் மட்டுமே தங்கள் கட்சிக்கு அலைந்து திரிந்து வாக்கு சேகரித்தனர். இந்திய ஜனநாயகத்தில் முதன்முறையாக மக்கள் ஒரு அரசுக்கு வாக்கு சேகரித்து கொண்டுள்ளனர். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் சோஷியல் மீடியா, பஸ்ஸில் ட்ரியினில் சர்ச்சா என அரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர்.
ஒரு காலத்தில் நாங்கள் சிறுவர்களாக போஸ்டர் ஒட்டுவது, சுவற்றில் எழுதுவது என்று செய்தோம். அதில் ஒரு ஆனந்தம் இருந்தது, இந்த நாட்டிற்க்காக ஏதோ செய்கிறோம் என்று மனம் சந்தோஷப் பட்டது. இன்று நீங்கள் செய்வதை பார்க்கும் போது அதெல்லாம் என் மனதில் வந்து போகிறது.

நண்பர்களே, நான் செய்ய நினைத்து முடியாத ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும். உங்களால் மட்டுமே அது முடியும். வாரணாசியில் நான் ஜெயிப்பது ஒரு பெரிய விஷயமில்லை. ஒரு பிரதமராக இருந்தவர் ஒரு தொகுதியில் ஜெயிப்பது ஒரு சாதனை அல்ல. நான் உங்களிடம் கேட்க போவது வேறு ஒன்று.

அதாவது இந்திய ஜனநாயகம் அதில் மக்கள் பங்கு என்ன என்பதை இந்த உலகிற்கே புரிய வைக்க வேண்டும். அதற்கு சில சாதனைகளை இந்த தொகுதியில் செய்ய வேண்டும். அது உங்களால் மட்டுமே முடியும். செய்வீர்களா?

முதலாவது ஒவ்வொரு பூத்திலும் 5% பெண்கள் அதிகம் வாக்களிக்க வேண்டும். உலகிற்கு எங்கள் பெண்கள் சுதந்திரம் புரிய வேண்டும். அவர்கள் இந்த நாட்டின் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதை இதன் மூலம் நிரூபிக்க வேண்டும்.

இரண்டாவது முதல் முறையாக வாக்களிக்க வரும் சகோதர சகோதரிகளுக்கு ஒரு துண்டு வெல்லத்தை கொடுத்து வாழ்த்துங்கள். வருங்காலத்தில் இவர்களே இந்த நாட்டை முன்னேற்ற போகிறவர்கள். அவர்கள் அதற்கான முதல் அடியை எடுத்து வைப்பதற்கு வாழ்த்துங்கள்.

மூன்றாவது எதிர்க் கட்சி வேட்பாளரோ, ஆதரவாளர்களோ அவர்களை தரம் குறைந்து விமர்சிப்பது வேண்டாம். அவர்களின் பங்கு ஜனநாயகத்தில் முக்கியமானது. அது இல்லாமல் ஜனநாயகம் முறையற்றது. அவர்களையும் வாழ்த்தி அவர்கள் பணியை செய்ய உதவுங்கள்.

நான்காவது அதிக பட்ச வாக்களிப்பு. நான் எத்தனை அதிக வாக்கில் வெற்றி பெறுகிறேன் என்பதை விட வாரணாசியில் எத்தனை சதம் வாக்களிப்பு நடந்தது என்பதை பெருமையாக நினைக்கிறேன்.

ஐந்தாவதாக அமைதியான, சகோதரத்துவத்துடன், ஒருவருக்கு ஒருவர் மரியாதையுடன் தேர்தல் ஒரு திருவிழாவாக நடப்பதை விரும்புகிறேன். உலகம் நம்மை ஆச்சரியத்துடன் பார்ப்பதை பார்த்து பெருமிதம் கொள்ள வேண்டும்.

கடைசியாக குறைந்த செலவில் தேர்தல் நடக்க வேண்டும். உங்கள் அதிகபட்ச செலவு என்ன? சாய் அல்லது சிற்றுண்டி. அதற்காக ஏன் செலவிட வேண்டும். உங்கள் தொகுதியில் 1000 வாக்காளர் என்றால் சுமார் 250-300 குடும்பங்கள்.

25 பாஜகவினர் ஆளுக்கு 10-12 குடும்பங்களை பிரித்து கொள்ளுங்கள். அவர்கள் குடும்ப உறுப்பினராக பழகுங்கள். அவர்கள் தேவை அறிந்து செயல்படுங்கள். காலை சாய் ஒருவர் வீட்டில், சிற்றுண்டி ஒரு வீட்டில் என செலவை நிறுத்துங்கள்.
இதெல்லாம் செய்வீர்களா?

இந்திய ஜனநாயகத்தை பார்த்து உலக நாடுகள் மூக்கில் விரல் வைக்கும்படி பெருமை படுத்துவீர்களா? இந்த டீவி, பத்திரிகை போன்றவை TRPக்காக நீயா நானா என்று பேசவைப்பார்கள். நீங்கள் அப்படி செய்ய வேண்டாம்.

பெரும்பாலான வேட்பாளர்கள் போல இல்லை உங்கள் வேட்பாளர். வேட்பு மனு பதிவு செய்த பின்னர் இங்கே வரப் போவதில்லை. உங்களை நம்பி அவர் வேறு வேலை செய்யப் போகிறார். நீங்கள் அனைவரும் அவருடைய வேலையை செய்ய வேண்டும்.

இந்த தொகுதி உங்கள் கையில். அதை சமாளிப்பதும், மேலே வளர்ப்பதும் உங்கள் கையில். உங்கள் வேட்பாளருக்கு நீங்கள்தான் எஜமான். உங்கள் கட்டளையை ஏற்று வேறு வேலை செய்ய நான் போகலாமா? உத்தரவு கொடுங்கள்.

மோடியின் இந்த பேச்சை கேட்டுக்கொண்டிருந்த மஹராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த முகமது ரிஸ்வான் உலகில் மோடியை மதவாதி என்று சொல்பவர்கள் தலை சிறந்த மனிதனை மதிக்க தெரியாதவர்கள் அதில் நானும் ஒருவனாக இதுநாள் வரை இருந்திருக்கிறேன் மோடி ஒரு சுயநலமில்லா தேசியவாதி என்று கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் இன்றைய பேச்சு இந்தியா முழுவதுமுள்ள பாஜக தொண்டர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories