பாகிஸ்தானில் 3 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில், 5 சீனப் பொறியாளர்கள் மற்றும் பாகிஸ்தானியர் ஒருவர் உயிரிழந்தனர். எனவே அணைகட்டும் பணிகளை சீன நிறுவனம் நிறுத்திவிட்டது.
இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரி கூறுகையில்,’பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சீன ஒப்பந்த கட்டுமான நிறுவனம் 3 அணைகளின் கட்டமைப்புப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. சீனர்கள் பணிபுரியும் இடங்களில் மீண்டும் வேலையைத் தொடங்கும் முன் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சீன அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இவ்வாறு சீனத் தொழிலாளர்களை குறிவைத்து தாக்குவது இரு நாடுகளுக்கு இடையில் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் புதிய பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துமாறு பாகிஸ்தான் அரசிடம் சீன நிறுவனம் கோரியுள்ளது. தாக்குதலையடுத்து சீன பொறியாளர்கள் வசிக்கும் எல்லையை விட்டு வெகுதூரம் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன” என்றார்.
சீன ஒப்பந்ததாரர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தை சிறந்த பாதுகாப்புக் கட்டமைப்பை அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உறுதியளித்த பின்னரே பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வாரம் ஐந்து சீனப் பொறியாளர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், பாகிஸ்தானில் இரண்டு பெரிய அணைக்கட்டுத் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை சீன ஒப்பந்தக்காரர்கள் நிறுத்தினர். சுமார் 1,250 சீனர்கள் பணிபுரியும் தளங்களை மீண்டும் திறப்பதற்கு முன் பாகிஸ்தான் அதிகாரிகளால் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என்று சீன ஒப்பந்த நிறுவனங்கள் கோரியுள்ளன.
சீனத் தொழிலாளர்களின் பாதுகாப்பு பெய்ஜிங் மற்றும் இஸ்லாமாபாத் இரண்டிற்கும் முக்கியமானதுதான்! எனினும், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அடிக்கடி சீன நாட்டினரை குறிவைக்கிறார்கள். செவ்வாய் அன்று தற்கொலைப் படையைச் சேர்ந்தவர், அணைக்கட்டு தளங்களில் ஒன்றின் அருகே மலைப்பாங்கான சாலையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை சீனர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி சீனத் தொழிலாளர்களைக் குறிவைத்தார். ஓர்ஆழமான பள்ளத்தாக்கில் அவர்கள் சென்ற வாகனம் வெடித்துச் சிதறி உருண்டது.
சைனா கெஜோபா குரூப் நிறுவனம், மாகாணத்தில் உள்ள தாசு அணையின் பணியை நிறுத்தியுள்ளது. பவர் சீனா டயமர் பாஷா அணையின் பணியை நிறுத்தியுள்ளது. இதனை, கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்த மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“அவர்கள் அரசாங்கத்திடம் புதிய பாதுகாப்பு திட்டங்களைக் கோரியுள்ளனர். தாசு அணை திட்டத்தில் சுமார் 750 சீன பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர், மேலும் 500 பேர் டயமர் பாஷா அணையில் பணிபுரிகின்றனர்,” என்றார் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர்.
சீன பொறியாளர்களின் நடமாட்டம் அவர்கள் வசிக்கும் வளாகங்களுக்கு, தளங்களுக்கு அருகில் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானை சீனா பலமுறை வலியுறுத்தி வந்தது. கைபர் பக்துன்க்வாவில் முகமந்த் அணை இருக்கும் இடத்தில் சீன பொறியாளர்கள் இன்னும் பணிபுரிகின்றனர்.
சீனாவின் நெருங்கிய பிராந்திய கூட்டாளியாக பாகிஸ்தான் இருந்தாலும், அந்நாட்டுக்கு சீனா உடனடி நிதி உதவிகள் பல வழங்கியிருந்தாலும், போராளிகள் அடிக்கடி போராடும் பாகிஸ்தானில், சீனாவுக்கு எதிரான வெறுப்புணர்வு என்பது புதிய நிகழ்வு அல்ல.
சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் உலகெங்கிலும் இரண்டு டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டங்களால் உருவாக்கப்படும் பணியிடங்கள் அல்லது நிதிச் சேரல்களில் நியாயமான பங்கு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று பாகிஸ்தானியர்கள் நீண்ட காலமாக புகார் கூறி வருகின்றனர்.
செவ்வாய் கிழமை நடந்த தாக்குதல் இஸ்லாமாபாத்தில் உள்ள சீன தூதரகத்தில் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்கள் அடுத்தடுத்து இரங்கல் தெரிவித்தனர். சீனாவின் வெளியுறவு அமைச்சகம்,”சீன குடிமக்கள், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க” பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டது.
தென்மேற்கில் உள்ள குவாதர் ஆழ்கடலில் உள்ள அலுவலகங்களை பயங்கரவாதிகள் தாக்க முயன்ற சில நாட்களுக்குப் பிறகு செவ்வாய்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குவாதர் ஆழ்கடல் துறைமுகம் பாகிஸ்தானில் சீன முதலீட்டின் அடித்தளமாகும்!