
கரூர் மாவட்ட திரையரங்கு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கினார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
தமிழக அரசின் அறிவிப்பின் படி திரையரங்குகள் மூடப்பட்டு 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் வேலையின்றி சிரமப்பட்டு வரும் திரையரங்கு ஊழியர்களுக்கு தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமது சொந்த நிதியிலிருந்து MRV TRUST சார்பில் அரிசி, பருப்பு, கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள் உள்ளிட்ட அத்தியாவசிய அடங்கிய பொருட்களை வழங்கினார்.
கரூரில் திரையரங்குகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரங்களால் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.