நல்லது நடக்கவும், தீயது நடக்காமல் இருக்கவும் செய்ய வேண்டியது யாது?

Published:

bharathi theerthar

மனிதப் பிறவியில் சுகமும் துக்கமும் கலந்து வருகிறது ஒருவன் தனது துக்கத்தினால் மனம் சஞ்சலப்படுபவனாக இருந்தால் அவன் மனதில் மற்றவர்களைப் பற்றிய பல தவறான எண்ணங்கள் ஏற்படும்

என்னுடைய துன்பத்திற்கு அவன்தான் காரணம் அவனை எப்படி பழி வாங்கலாம் என்று சிந்தனை ஏற்படும் இதனால் பல அனர்த்தங்கள் ஏற்படும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் நாம் பழி சுமத்தியவனுக்கும் நமது துன்பத்திற்கும் தொடர்பு இல்லை என தெரியும்

துன்பம் நம்முடைய செயலால்தான் வந்தது என்பதையும் புரிந்துகொள்ள முடியும் இன்று வந்துள்ள சுக துக்கங்களுக்கு காரணம் ஜென்மத்தில் நாம் செய்த புண்ணிய பாவங்கள் ஆகையால் இப்பொழுது எந்த பலன் கிடைத்தாலும் இது நம் கர்ம பலனை அனுசரித்து பகவானால் நிர்ணயக்கப்பட்டிருக்கிறது என்கிற பாவனை அனைவருக்கும் இருக்க வேண்டும்.

அதுதான் திருப்தியை கொடுக்கும் அதிலேயே ஆனந்தமாக இருப்பது தான் நல்லது இத்தகைய பாவனை ஒருவனுக்கு இருந்து விட்டால் துன்பம் வரக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு இப்பொழுது நல்ல செயல்களைச் செய்வதற்கான நல்ல எண்ணம் மனதில் வந்துவிடும்.

ஆகவே சுகத்திலும் துக்கத்திலும் நம் மனது சஞ்சல பட கூடாது என்பதுதான் பகவானின் தாத்ப்பரியம் இதை எல்லோரும் நன்றாகப் புரிந்துகொண்டு ஈஸ்வரனுடைய அருளுக்கு பாத்திரமாகுங்கள் என்று ஸ்ரீசிருங்கேரி மகாசன்னிதானம் அருளுரையில் குறிப்பிடுகிறார்கள்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

யத்ருச்சா லாப ஸந்துஷ்ட்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே!!

Related articles

Recent articles

spot_img