அறந்தாங்கியில் பாஜக சார்பில் கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் கரோனாவிற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் அறந்தாங்கி நகர பாஜக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ஆதரவற்றவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்கள் இந்நிலையில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சிக்கு நகர தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். நிர்வாகிகள் நகரவங்கி துணைதலைவர் முரளிதரன் துணை தலைவர் காடப்பன், மகளிரணி கவிதா,சரஸ்வதி,ஜெயபாண்டியன் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் 300 பேர்களுக்கு ரூ.500 மதிப்பிலான பொருட்களை மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் வழங்கினார்.. நிகழ்ச்சியில் தாமரைசெல்வன், மாவட்ட துணை தலைவர் ஜெகதீசன்,சரஸ்வதி,ரங்கையன்,அய்யப்பன் முருகன்,மனோகரன்,மணிகண்டன்,பிரபாகரன்,கார்த்திகேயன்,உமா,கனிமொழி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
