railway news - 2026

தெற்கு ரயில்வேயில் பாதைகள் மேம்படுத்தல்; ரயில்களின் வேகம் அதிகரிப்பு!

சற்றுமுன் தமிழகம் திருச்சி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
railway news - 2026
#image_title

தெற்கு ரயில்வேயில் பாதைகள் மேம்படுத்தல் பணிகள் நிறைவுற்றுள்ளதாகவும், எனவே ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுவதாகவும் இதனால் பயண நேரம் வெகுவாகக் குறையும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் என 6 கோட்டங்கள் உள்ளன. இந்தக் கோட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கூடுதல்பாதை அமைப்பது, ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறிய போது, தெற்கு ரயில்வேயில் ரயில் பாதை மேம்படுத்தப்பட்ட முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில், சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம்-ஜோலார் பேட்டை, சென்னை சென்ட்ரல்- ரேணிகுண்டா என மொத்தம் 413.62 கி.மீ., தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் அதிகபட்சம் மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

1,272 கி.மீ., தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, 110 கி.மீ. வேகம் வரை விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் 75 நிரந்தர வேகக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 170 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைந்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் ரயில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிக்காக மட்டும் மத்திய பட்ஜெட்டில் ரூ.1,240 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல்வேறு வழித்தடங்களில் தண்டவா ளம் மேம்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட உள்ளது.

தண்டவாளம் புதுப்பித்தல், சிக்னல் மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்மூலம், அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் ரயில்களை இயக்க முடியும்… என்று கூறினர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் சில ரயில்கள் நீட்டிக்கப்படவுள்ளன. பெங்களூர் – சென்னை ரயில் திருச்சி வரையும், கோவை – பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் பாலக்காடு வரையும், தன்பாத் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் கொச்சுவேலி வரையும், திருச்சி – ஹவுரா ரயில் திருநெல்வேலி வரையும், சென்னை – நாகர்கோவில் ரயில்கள் கன்னியாகுமரி வரையும் நீட்டிக்கப் படவுள்ளன.

புதிய ரயில்களின் முன்மொழிவு –

  1. நாகர்கோவில் LTT மூன்றுவார எக்ஸ்பிரஸ் (via TEN – MDU – TPJ – WADI)
  2. திருநெல்வேலி – ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா இருவார எக்ஸ்பிரஸ்
  3. திருநெல்வேலி – ஜோத்பூர் வார எக்ஸ்பிரஸ் (சென்னை எழும்பூர் வழியாக)
  4. தாம்பரம் – சான்றகச்சி வார எக்ஸ்பிரஸ்
  5. ராமேஸ்வரம் – மால்டா டவுன் வார எக்ஸ்பிரஸ் (சென்னை எழும்பூர் வழியாக)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.