ஆவுடையார்கோயில்: ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம் நடந்தது.
ஆவுடையார்கோயிலில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருவாசகம் பிறந்த கோயிலாகும். இக்கோயிலில் திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி மார்கழி திருவிழா நடந்து வருகிறது.
9ம் நாள் விழாவை முன்னிட்டு அதிகாலையில் மாணிக்கவாசகர் தேரில் எழுந்தருளிய நிலையில் அதனை தொடர்ந்து தேருக்கு உரியபூஜைகள் செய்து திருவாவடுதுறை ஆதீன கட்டளை வேலப்பதம்பிரான் சுவாமிகள் ஈரோடு தேர்திருப்பணிகுழு,நெற்குப்பம் ஏகாம்பரம் சேர்வை, தாரணி வீரப்பன் சேர்வை குடும்பத்தினர்கள் மண்டகப்படிதாரர்கள் வடம் தொட தேரோட்டம் நடந்தது.
விழாவில் முன்னாள் எம்எல்ஏ ரத்தினசபாபதி, ராஜநாயகம், முன்னாள் சேர்மன் நரேந்திரஜோதி,கவுன்சிலர் செந்தில்குமரன், ஊராட்சி தலைவர் சந்திரா தேர் திருப்பணிக் குழு செயலாளர் மணிவாசகம் பொருளாளர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தென்மண்டலமேலாளர் ராமச்சந்திரன் மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் கண்காணிப்பாளர் சுப்ரமணியன்,மணியம் ராமன் ஆகியோர் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை அறந்தாங்கி டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் செய்தனர்.விழாவைமுன்னிட்டு நகரில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அபிஷேக அர்ச்சனைகளை ஆத்மநாதருக்கு நம்பியார்களும் மாணிக்கவாசகருக்கு சிவாச்சாரியார்களும் செய்தனர். ஒதுவார் குழுவினர் பக்கவாத்தியத்துடன் திருவெம்பாவை பாராயணம் செய்தனர். சிவனடியார்களும் சிவன் பாடல் பாடினர்.விழாவை முன்னிட்டு நகரின் பல இடங்களில் அன்னதானம் நடந்தது.
சிவனடியார்கள் சிவன் வேடம் அணிந்து நடனமாடினர் சிவ தொண்டர்கள் தேரின் பின்பக்கம் திருவாசகம் திருமுறை படித்த வண்ணம் வழிபாடு செய்தனர்.
மார்கழி திருவாதிரை திருவிழா ஆவுடையார்கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து சிவ பக்தர்கள் ஆத்மநாதர் யோகாம்பிகா குதிரைச்சாமி உள்ளிட்ட தெய்வங்களை வழிபட்டு தேரில் காட்சி கொடுத்த மாணிக்கவாசகரையும் வழிபட்டனர்.