முசிறியில் திருணமான 10 நாளில் இளம்பெண் கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி சுந்தர் நகர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் இளம்பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக, கிராம நிர்வாக அதிகாரி ஆனந்துக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து, அவர் உடனடியாக முசிறி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, தற்கொலை செய்த பெண் குறித்து விசாரணை மேறகொண்டனர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி விக்னேஷ்வரன் என்பவரது மனைவி ரோஜா(21) என்பதும், இவர்களுக்கு திருமணமாகி 10 நாட்களே ஆனதும் தெரியவந்தது.
திருமணமான சில நாட்களிலேயே ரோஜா மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதால் அவரை யாரும் கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டரா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிற்னர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் முசிறி ஆர்.டி.ஓ துரைமுருகன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். திருணமான 10 நாளில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது உறவினர்கள் மற்றும் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.