தமிழகத்தில் காவல் மருத்துவமனைகள் இனி நவீன வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கடந்த சில நாட்களாகவே பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது.
அதன்படி கோவை, மதுரை, திருச்சி, சென்னை மவுண்ட், ஆவடி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள காவல் மருத்துவமனைகள் நவீன வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் 36 படுக்கை வசதிகள், சிடி ஸ்கேன் உள்ளிட்ட நவீன உபகரணங்களுடன், சிறிய சிகிச்சைக்கான அரங்குகள் உடனும் 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிட்டுள்ளார்