மதுரை: மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த செவ்வேல் பேக்கரியில் இன்று சிலிண்டர் பற்ற வைக்கும் போது திடீரென தீ பற்றி உள்ளது.
இந்த தீயானது சற்று நேரத்தில் கேக் செய்யும் சமையல் அறையில் உள்ளே மலவென பற்றி எரிய தொடங்கியது. இதனால், பதறிப் போன ஊழியர்கள் பேக்கரியை விட்டு வெளியே வந்தனர் .
இது குறித்து ,மதுரை டவுன் தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை ஊற்றி பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்ததால் அப்பகுதியில் நடைபெற இருந்த மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு படையினரை சுப்பிரமணியபுரம் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர் .
சம்பவம் குறித்து, ஜெயந்திபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.