அரை சதவீதம் வாக்கு வங்கிக்காக 10 சதவீதத்தை இழப்பவன் புத்திசாலியா?!

278

அரை சதவீதம் வாக்கு வங்கிக்காக பத்து சதவீத வாக்குகளை இழப்பவன் புத்திசாலியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் கொங்கு மக்கள் கட்சி ஈஸ்வரன்.

திருமாவளவனின்  அரை சதவீதம் ஓட்டுக்காக திமுக அவரை சேர்த்துக் கொண்டால், அதனால் திமுக-வுக்கு எப்போதும் கிடைக்கும் 10 சதவீதம் ஓட்டு பறிபோவது உறுதி. என்று அடித்துக் கூறுகிறார் கொங்கு ஈஸ்வரன்!

திருமாவளவன், தனது பேச்சுகளில் கலப்பு திருமணம் குறித்தும் பிற சாதிப் பெண்கள் குறித்தும் கொச்சையாகப் பேசியதுடன், பிற சாதி ஆண்களிடம் சரக்கு இல்லை முறுக்கு இல்லை அதனால்தான் அந்த சாதிப் பெண்கள் அவர்களை விட்டு விட்டு நம் சாதி இளைஞர்களைத் தேடி வருகிறார்கள்… என்று பேசினார்.

இந்த வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகப் பரவியது. இதை அடுத்து மற்ற சமுதாய மக்கள் இதற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தார்கள். திருமாவளவன் போன்ற ஓரிருவரால் ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே கேடு என்று கொதித்தார்கள்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக ஒட்டுமொத்தமாகப் போர்க்குரல் எழுப்புகின்றனர் பிற சாதிக் கட்சியினர்.

கொங்கு மண்டலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ஈஸ்வரன், அதனை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

ஒரு கட்சியை கூட்டணியில் சேர்க்கும் பொழுது அந்தக் கட்சியால் ஒரு அரை சதவிதம் ஓட்டு வருகிறது என்று சொன்னால் அந்த கட்சியினுடைய தலைவரின் கொச்சைப் படுத்துகின்ற பேச்சால் ஒரு பத்து சதவிகிதம் வாக்குகள் வராது என்று சொன்னால் கூட்டணிக்கு தலைமை தாங்குகிற கட்சி யோசிக்கவேண்டும்

அப்படிப்பட்ட நிலைப்பாடுகளை எடுக்கும் பொழுது எல்லா கணக்குகளும் தப்பு கணக்காகவே போகும் அதுதான் இன்று எதார்த்தம் என்பதை நாம் தெரிவிக்க வேண்டும் அந்த அவசியம் இப்போது எழுந்துள்ளது

கொங்கு நாட்டுப் பகுதியில் எந்த ஜாதியிலும் நமக்கு வெறுப்பு கிடையாது நமக்கு எந்த வகையிலும் யாரும் பிரச்சினை செய்யக்கூடாது அவ்வளவுதான்.!

ஊருக்கு இரண்டு பேர் இருப்பார்கள் ஊருக்கு இரண்டு பேர் அவர்கள் செய்யும் டார்ச்சர் அதுதான் அந்த ஜாதிக்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது! அந்தக் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது

இரண்டு பேர் செய்யும் டார்ச்சர்! நிம்மதியாக வாழ விடமாட்டார்கள்! நம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொன்னால், இவன் கூட்டணி வைத்து ஒரு கட்சியில் போய் ஜெயித்து அந்தக் கூட்டணி ஆட்சி பலத்துடன் வந்துவிட்டால் எந்த அதிகாரமும் இல்லாத நாளிலேயே இவ்வளவு அராஜகம் செய்கிறார்கள் எனும்போது அதிகாரம் வந்துவிட்டால் இவர்கள் என்னவெல்லாம் அராஜகம் செய்வார்களோ…! ஒரேயடியாக நம்மை அடிமையாகிவிடுவார்களே.. என்று பேசினார் கொங்கு ஈஸ்வரன்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...