
மதுரை: மதுரை நகரில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க, வருவோர் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை அண்ணாநகர் உழவர் சந்தையின் வாசலில் தடுப்புகள் வைக்கப்பட்டு , போலீஸார் கருவிகள் மூலம் பரிசோதிக்கப்பட்டு, கைகளில் கிருமி நாசினியால் கழுவிய பிறகே காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை நகரில் உள்ள சொக்கிகுளம், புதூர், ஆணையூர், டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பல இடங்களிலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், பல இடங்களில் முகக் கவசம் இன்றி வந்தவர்களை பிடித்து ரூ.200 அபராதமும் வசூலிக்கப்பட்டது.
இவை தவிர கடைகளில் சமூக பரவல் பின்பற்றப்படுகிறதா, என பறக்கும் படையினர் கண்காணித்தனர்.
மதுரை கோசாகுளம், முடக்காத்தான், அண்ணாநகர் யாணைக்குழாய் பகுதிகளில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் தரப்படுகிறதா, எனவும் கண்காணித்தனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை