
ஃபேர் அண்ட் லவ்லி அழகுசாதன கிரீமின் பெயரை மாற்ற ஹிந்துஸ்தான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நிறத்தை குறிக்கும் ஃபேர் என்ற வார்த்தையை மாற்றி புதிய பெயருடன் விரைவில் அறிமுகமாக உள்ளது.
1975-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் ஃபேர் அண்ட் லவ்லி என்ற முகத்தில் பயன்படுத்தும் கிரீமை அறிமுகம் செய்தனர். இந்த கிரீமை பயன்படுத்தினால் வெள்ளையாக மாறலாம் என விளம்பரம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவல்துறையினரால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிறம் முக்கியமல்ல என்ற வாசகம் உலகம் முழுவதும் எதிரொலித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தான் தயாரிக்கும் நிறம் மாற்றம் தரும் கிரீம்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து இப்போது இந்தியாவில் ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம் இந்த முடிவை அறிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களாகவே அழகு சாதன பொருட்களுக்கும், அதில் நடித்துள்ள நடிகர்களுக்கும் எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து இப்போது பல அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வெள்ளை, நிறம் மாற்றம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி விளம்பரம் செய்ய மாட்டோம் என கூறி வருகிறது.
இப்போது ஹிந்துஸ்தான் நிறுவனம் ஃபேர் அண்ட் லவ்லி கிரீமுக்கு புதிய பெயர் வைத்த பின் அதனை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.
ட்விட்டரில் பலரும் இதற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் ட்வீட் செய்து வருகின்றனர். அதோடு #Fair&Lovely என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்துள்ளனர்
We’re committed to a skin care portfolio that's inclusive of all skin tones, celebrating the diversity of beauty. That’s why we’re removing the words ‘fairness’, ‘whitening’ & ‘lightening’ from products, and changing the Fair & Lovely brand name.https://t.co/W3tHn6dHqE
— Unilever #StaySafe (@Unilever) June 25, 2020
#HUL to remove 'fair' from 'Fair and Lovely'#FairandLovely pic.twitter.com/6NOmW4sERy
— Amandeep Singh (@memesbyaman) June 26, 2020
Fair is no lovely anymore.
— Dr. Priyanka sharma (@dr_shapriyanka) June 26, 2020
Unilever, finally agreees to remove 'Fair' word from its product.
It’s not the fair skin but it’s her SMILE, that makes her look beautiful in the later pictures.
Long pending case about to close in Supreme Court now. ?#FairandLovely pic.twitter.com/pFPvbymuKC
Anyone Remember this ad by @BajajElectrical ?#FairandLovely pic.twitter.com/Sf8iUZzJlC
— ??? ??? (@RawHitRaj) June 26, 2020
Is it FAIR to say that their name sounds LOVELY now? ?#fairandlovely #socialmediaagency pic.twitter.com/8oZQkoPfd7
— Digibaskets (@digibaskets) June 25, 2020