அருவிகளில் வெள்ளப்பெருக்கு! குற்றாலத்தில் குளிக்க தடை!

குற்றாலம் பகுதிகளில் கனமழை அருவிகளில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை

IMG 20191125 WA0014

குற்றாலம் பகுதிகளில் கனமழை அருவிகளில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த இரு நாட்களாக கனமழை பெய்வதால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

IMG 20191125 WA0012

இந்நிலையில் நேற்று இரவு வரை குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். ஐந்தருவியில் குறைந்த அளவில் ஐயப்ப பக்தர்கள் குளித்து விட்டு சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிப்பதற்கு தடை நீடிக்கிறது. குற்றாலம் மெயினருவியில் ஓரமாக நின்று குளிப்பதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

IMG 20191125 WA0005

தற்போது சபரிமலை செல்லும் பக்தர்கள் பெருமளவில் குற்றாலம், செங்கோட்டை ஆகிய பகுதிகளின் வழியாக ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்ட ஐயப்ப தலங்களுக்கும் சென்று தரிசித்து விட்டு செல்வதால் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :