சபரிமலைக்கு செல்ல ரஹானா பாத்திமாவுக்கு பாதுகாப்பு தர முடியாது! போலீஸ் கைவிரிப்பு!

Published:

rahenafathima - 2026

சபரிமலைக்கு வருவதற்கு தனக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று ரஹானா பாத்திமா கொடுத்த விண்ணப்பத்தை கேரள காவல்துறை நிராகரித்துவிட்டது. நீதிமன்ற உத்தரவுடன் வந்தால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்று கூறி விட்டது.

கேரளாவைச் சேர்ந்த ரஹானா பாத்திமா கடந்த வருடம் சபரிமலைக்கு வருவேன் என்று முன்னதாகவே சமூகவலைதளங்களில் தகவலை பரப்பி விட்டு சபரிமலை வந்தார். அந்த நேரம் பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று சுற்றுலாத்தலம் போல கருதிக்கொண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது . ஆனால் சபரிமலை சுற்றுலாத்தலம் அல்ல மத வழிபாட்டுத் தலம் என்று பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர் .

பக்தர்களின் ஆவேசத்தையும் உணர்வுகளையும் மீறி ஹிந்து மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் விதத்தில், சபரிமலை தலத்தின் பெருமையை கொச்சைப்படுத்தும் விதத்தில், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கிறிஸ்தவர்கள் பெருமளவில் சபரிமலையின் புனிதத்தை குலைக்க முயன்றார்கள் ..

அதற்கு மாநில அரசும் நீதிமன்றத்தின் உத்தரவை காரணம் காட்டி மிகவும் துடிப்புடன் சபரிமலை புனிதத்தை அழிப்பதற்கு துணை நின்றது.

ஆனால் அடுத்து நடந்த தேர்தலில் கேரள கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வியை அடைந்தது இதனால் இப்போது விழித்துக் கொண்டுள்ள மாநில அரசு, தற்போதைய உச்சநீதிமன்ற உத்தரவு அப்படியே தொடர்ந்தாலும் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதைக் காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து யோசிக்க முடியும் என்று கைவிரித்து விட்டது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

குறிப்பாக ரஹானா பாத்திமா கடந்தமுறை சபரிமலைக்கு வந்தபோது நாப்கின்கள் மற்றும் மலையின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பொருள்களுடன் வந்ததால் பக்தர்கள் கடும் கோபம் அடைந்தனர்.

இந்தநிலையில் இந்த முறையும் நான் சபரிமலைக்கு செல்வேன் என்று ரஹானா பாத்திமா செய்தியாளர்களை அழைத்து பேட்டி அளித்தார். ஆனால் கேரள தேவசம் போர்டு அமைச்சர் இதுகுறித்து கூறுகையில் சபரிமலை ஆக்டிவிஸ்ட் களுக்கான இடமில்லை இது புனிதத்தலம் பக்தர்களுக்கான வழிபாட்டுத்தலம் என்று உறுதியாக கூறியுள்ளார்

இந்த நிலையில் ரஹானா பாத்திமா இந்த ஆண்டும் சபரிமலை செல்ல போவதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி கொச்சி காவல்துறை துணை ஆணையரிடம் நேற்று மனு ஒன்றை அளித்தார்

ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுடன் வந்தால் மட்டுமே காவல்துறை பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .

முன்னதாக கடந்த வருடம் பிஎஸ்என்எல் ஊழியராக இருந்த ரஹானா பாத்திமா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது சஸ்பெண்ட் நடவடிக்கை இப்போதும் தொடர்கிறது .

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மத உணர்வை புண்படுத்திய கைது செய்யப்பட்டார் . அந்த வழக்குகள் தற்போதும் நடைபெற்று வருகின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img