ஆட்சியர் கையெழுத்திட்டு நெல்லை மாவட்டத்தில் நூதன மோசடி

அது உண்மையா? பொய்யா என கண்டுபிடிக்காத முடியாத அவல நிலையில் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளதாகக் கூறப் படுகிறது,.  மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து

மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு நெல்லை மாவட்டத்தில் நூதன மோசடி ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கையெழுத்து போட்டு சத்துணவு பணியாளருக்கான போலி பணி நியமன ஆணை வழங்கியதாக வட்டார வளர்ச்சி அலுவலரின் புகாரின் பேரில் போலிசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலி பணி நியமன ஆணை கும்பல் குறித்து தீவிர விசாரணை செய்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்று பரவலாகக் கூறப் படுகிறது.

கடந்த மாதம் 23.1.2018. அன்று கொடுக்கப்பட்ட போலி பணி நியமன ஆணை கொடுக்கப்பட்டும் அது உண்மையா? பொய்யா என கண்டுபிடிக்காத முடியாத அவல நிலையில் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளதாகக் கூறப் படுகிறது,.  மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து இது போன்ற மோசடி  கும்பலை கண்டுபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.