மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., நாட்டு நலப்பணி திட்டம் 21.11.2022 முதல் முடிய 27.11.2022 கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏ.வி.உயர்நிலை பள்ளியில் வைத்து நடைபெற்றது.
முகாமின் கடைசி நாளான நவ. 27 இன்று பொது மருத்துவ முகாம் பாவூர்சத்திரம் எஸ். கே. டி .யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழு தலைமையில் நடைபெற்றது. காலை 10.00மணியில் இருந்து மதியம் 1.30 வரை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் சுமார் 150 பயனாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் செந்தமிழ் அரசு தலைமையில் மாணவர்கள் சீரும் சிறப்புமாக முகாமை நடத்தினர். மருத்துவ முகாம் டாக்டர் எஸ் சௌந்தர பாண்டியன் தலைமையில் டாக்டர் பி கோபி ,டாக்டர் ஆர் நிவேதா ,டாக்டர் பி ஐஸ்வர்யா பிரபா, டாக்டர் பாத்திமா பானு ,டாக்டர் பி பூர்ணிமா ,டாக்டர் பி டாக்டர் சூர்யா, கார்த்திகா, டாக்டர்எஸ். ஆன்டிலின் பெனின் ஷானி, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.