திமுக., வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும் மதிமுக., விசிக., விலகாது: பொன்.ராதாகிருஷ்ணன் கணிப்பு!

சென்னை: தி.மு.க., வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும் ம.தி.மு.க.,வும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திமுக.,விடம் இருந்து விலகும் நிலையில் இல்லை என்று கூறினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

மேலும் அவர் கூறுகையில், இலங்கைத் தமிழர்களை கொன்று குவிக்க துணை நின்ற தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு தமிழர்கள் பற்றி பேச தகுதி இல்லை என்றார்.

முன்னதாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்,
கல்யாண வீட்டில் வந்து கதறி அழுபவர் வைகோ என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

கல்யாண வீட்டில் கதறி அழும் பழக்கம் கொண்டவர் வைகோ என்று கூறிஅ பொன். ராதாகிருஷ்ணன், வைகோவுக்கு எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தெரியாது… கல்யாண வீட்டில் கதறி அழும் பழக்கம் கொண்டவர் அவர் என்றார்.