கலாசாரத்தை பாதுகாப்பதால் மோடி மதவாதி என்றால் மதவாதியாக இருப்பதில் தவறில்லை – கிருஷ்ணசாமி அதிரடி பேட்டி !

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்த பேட்டி, இன்று பலராலும் பகிரப் பட்டு வருகிறது. அதில் அவர் அளித்த பதில்கள் மிகத் தெளிவாகவும், அதே நேரம் தைரியமாகவும் அமைந்திருந்தது. இது பலருக்கு வியப்பை அளித்துள்ளது.

  • எங்களது நீண்ட நாள் கோரிக்கையான தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரை நீண்ட நாட்களாக பட்டியல் இனத்தவர்கள் அட்டவணையில் இருந்து வெளியேற்ற, கோரிக்கை வைத்து வருகிறோம். அதனை முதலில் உணர்வு பூர்வமாக அணுகி மதுரையில் எங்களுக்கு அங்கீகாரத்தை அளித்தவர் மோடி.

  • மோடி அரசு பல்வேறு சாதனைகளை சத்தமில்லாமல் செய்திருக்கிறது ஆனால் விளம்பரப்படுத்தவில்லை. ஒரு டாக்டர் என்ற முறையில் நான் சொல்ல வருவது

முக்கியமாக,

  • பொருட்களின் விலை உயரவில்லை. உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைக்கப் பட்டுள்ளது.

  • இதய அடைப்பினை சரி செய்யும் ‘ஸ்டென்ட் சிகிச்சைக்கு’ 30 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது இது ஏழை நடுத்தர மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

  • மூட்டு மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர் .

  • நவீன அறுவை சிகிச்சை உபகரணங்களின் விலையைக் குறைத்து, மேற்கண்ட சிகிச்சைகளுக்கான கட்டணக் குறைப்பை உறுதி படுத்தியுள்ளனர் .

  • தற்போது கட்டணம் ஐந்தில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட் டம் மூலம் நாட்டின் எந்த பகுதியிலும் ஐந்து லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும் நிலையை மோடி உருவாக்கி இருக்கிறார்.

  • மோடியின் 5 வருட ஆட்சியில் எங்குமே சாதி மத மோதல்கள் நடக்கவில்லை

  • நாட்டின் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை காத்து வருகிறார்! குறிப்பாக எல்லை தாண்டிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு, அவர்கள் இடத்திற்கு உள்ளேயே சென்று இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியுள்ளது.

  • நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பதால் மோடி மதவாதி என்றால் மதவாதியாக இருப்பதில் தவறில்லை!

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி அளித்துள்ளார்.! அவரது கருத்து பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...