பயங்கரவாதிகள் மீதான சர்ஜிகல் ஸ்ட்ரைக்! பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்வு!

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக கருத்துகள் வெளியாகியுள்ளன.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் பிப்.14-ஆம் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீர மரணமடைந்தனர்.
இதை அடுத்து அடுத்த `12 நாட்களில் இந்தியா பதிலடி கொடுத்தது. பிப்.26ஆம் தேதி இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவிப் புகுந்து, பாலகோட், முசாபராபாத், சகோட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது குண்டு வீசி அவற்றை அழித்தன.
பயங்கரவாதத்தின் மீது உறுதியான நடவடிக்கைகளை, இரவு பகலாகக் கண் உறங்காமல், இரவு முழுதும் காத்திருந்து, தாக்குதலுக்கான திட்டமிடல்களை உடனிருந்து கவனித்து, வெற்றிகரமாகத் தாக்குதல் முடிந்த பின்னர் தான் ஓய்வெடுக்கவே சென்றார் மோடி.
இந்நிலையில் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக மக்கள் மத்தியில் எடுக்கப்பட்ட கருத்துக் கேட்புகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
ரிபப்ளிக் டி.வி.யின் ‘நேஷனல் அப்ரூவல் ரேட்டிங்’கில், மோடியின் செல்வாக்கு 62 சதவீதமாக அதிகரித்துள்ளதாம்.
அதே நேரம், மக்கள் பயங்கரவாதிகளை அடியோடு வெறுக்கிறார்கள். பயங்கரவாதிகளை தங்களைக் கொல்வதற்காகவே அனுப்பி வைக்கின்ற பாகிஸ்தானை அடியோடு வெறுக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ பாகிஸ்தானுக்கே ஆதரவு  காட்டுகிறார்கள்.  பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் போல் செயல்படும் காங்கிரஸ் தலைவர்களை அடியோடு வெறுக்கிறார்கள் இந்திய மக்கள்!
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...