மனோகர் பாரிக்கர்… சுவாரஸ்யமான 10 விஷயங்கள்!

கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் தனது 63 ஆவது வயதில் நேற்று காலமானார்.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் அவருக்கு சிகிச்சை நடந்து வந்தது. அவரது திடீர் மறைவு நாட்டை சோக மாயமாகியுள்ளது

பலரும் பாரிக்கருக்கு தங்களது இரங்கல்களையும் அவரது உயர்ந்த குணங்களையும் கூறி வருகின்றனர்! மதிப்பும் மரியாதையும் கொடுக்கக்கூடிய மிகவும் எளிமையான மனிதராக வாழ்ந்தவர் மனோகர் பாரிக்கர்!

பொதுவாழ்வில் அரசியல் தலைவர்களில் மிகவும் எளிமையானவராகவும் கர்வம் சிறிதும் இல்லாதவராகவும் போற்றப்பட்டவர்! அவர் குறித்த 10 ஆச்சரியகரமான விஷயங்கள் இதோ…

1.மனோகர் பாரிக்கர் கோவா சட்டப்பேரவைக்கு செல்வதற்கு தனது ஸ்கூட்டரிலேயே ஓட்டிச் செல்வார்

  1. பாரிக்கர் ஒவ்வொரு அரசியல்வாதியும் சாலையோரங்களில் உள்ள டீக்கடைகளில் டீ குடித்துவிட்டு அவர்களுடன் பேசினால்  மாநிலம் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்பார்

  2. பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய போது அக்பர் ரோடில் உள்ள பங்களாவில் ஒரே ஒரு அறையை தான் பயன்படுத்தி வந்தார்

  3. மத்திய அமைச்சராக பணியாற்றிய போது நாடாளுமன்றத்தில் முழு அட்டெண்டன்ஸ் அதாவது அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றத்துக்கு வந்து சாதனை படைத்தார் மனோகர் பாரிக்கர்

  4. விமான நிலையங்களில் செக்யூரிட்டி செக்கின்க்காக… பாதுகாப்பு சோதனைகளுக்காக மற்ற அனைத்து சாதாரண பயணிகளுடன் வரிசையிலேயே நிற்பார்

6.  மனோகர் பாரிக்கர் உள்ளூர் உணவகங்களில் பல நேரங்களில் எளிமையாக உணவு அருந்தி இருக்கிறார்

  1. மனோகர் பாரிக்கர் ஐஐடியில் படித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான இந்தியாவின் முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றவர்

  2. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன் நிறுத்திய முதல் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்!

  3. தன்னுடைய உடல்நலக் கோளாறு ஆரோக்கிய குறைபாட்டை புறந்தள்ளிவிட்டு முதலமைச்சராக தன்னுடைய கடைசி மூச்சு வரை மக்களுக்காகவே பணியாற்றியவர்!

  4. சமூக கட்டமைப்பில் மிக அதிக திறமை வாய்ந்தவராக கருதப்பட்டவர் பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கு அருமையான தீர்வுகளை அளித்தவர் பாரிக்கர்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...