
புதிய திட்டம்.. ஒரு கிலோ பிளாஸ்டிக் கொடுத்தல், 2 கிலோ அரிசி! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
உலகளவில் பிளாஸ்டிக் பொருட்களால் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுத்திடும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வருகிறது.
இந்தியாவிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க சில மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் சத்ய நாராயணன் தனது நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார்.

அனந்தபூரை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றும் முயற்சியாக ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சத்ய நாராயணன் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆட்சியரின் இந்த புதிய திட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.