
தியேட்டருக்குள் அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் அடித்து வெளுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஆரம்பம் முதலே ஒரு எதிர்ப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக இரு நடிகர்களின் ரசிகர்களும் எதற்கெடுத்தாலும் கண் மூடித்தனமாக மோதிக் கொள்கின்றனர்.
சமூக வலைதளங்களில் வாய்த்தகராறாக இருந்த இவர்களின் மோதல், அண்மைக் காலமாக அடிதடி வரை சென்றுள்ளது.

சமூக வலைதளங்களில் தங்களின் தலைவர்தான் உயர்ந்தவர் என பேசும் ரசிகர்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்களை ஆபாச வார்த்தைகளால் விமர்ச்சிக்கவும் தயங்குவதில்லை.
ஒரு நடிகரின் ரசிகர்கள் ஏதாவது ஒரு ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்தால் மற்ற நடிகரின் ரசிகர்களும் போட்டிக்கு ஒரு ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்கின்றனர். இதனால் டிவிட்டர் சமூக வலைதளம் திணறுகிறது.
இவர்களின் மோதல் நாளுக்கு நாள் எல்லை மீறி செல்கிறது. இதனால் அண்மையில் ஒரு உயிர் அநியாயமாக பறிபோனது.
காரைக்குடியில் உள்ள ஒரு தியேட்டரில் பிகில் படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர்கள், விஜய் குறித்தும் படம் குறித்தும் விமர்சித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை அடித்து நொறுக்கிவிட்டனர்.

விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கூட்டமாக சேர்ந்து தாக்கும் இந்த பதை பதைக்க வைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் காரைக்குடியில் உள்ள பாண்டியன் சினிமாஸ் திரையரங்கில் அரங்கேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலையில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள திரையரங்கில் பிகில் படத்தை ரிலீஸ் செய்ய தாமதமானதால் விஜய் ரசிகர்கள் சிலர், அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
அங்கிருந்த வாகனங்களை சேதப்படுத்தி பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது தியேட்டருக்குள்ளும் அடிதடி என இறங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Thalapathy65 ????must watch thalapathyai thappa pesiya thala rasigargalai thalapathy rasigargal????vachu senjutargal????????#bigil pandian cinemas karaikudi???? pic.twitter.com/o2uiE60osP
— karuppiah akash (@Akash_1616) October 28, 2019