கொரோனாவால் அதிகபட்சமாக கேரளாவில் 234 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 216 பேரும், தமிழகத்தில் 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து, இந்தப் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனது. 57 பேரில் 50 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள். தில்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர்கள் 1,131 பேர். இவர்களில் 515 பேரை மட்டுமே இதுவரை கண்டறிந்து உள்ளோம்! மீதம் உள்ளவர்கள் தயவு செய்து தாங்களாக முன்வர வேண்டும். என்று கூறினார் சுகாதாரத் துறை செயலர்.
இவர்களில் நாமக்கல்லில் 18 பேர், நெல்லையில் 22 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள். தில்லி தப்ளிக் ஜமாஅத் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற இஸ்லாமியர்கள் தயவு செய்து தாங்களாக முன் வந்து தகவல் கூறுங்கள் என்றும், தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர் என்றும் கூறிய பீலா ராஜேஷ், உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு செய்து வருகிறோம் என்று கூறினார்.