
மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்தவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்று 12.30 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய விமான பயணிகளிடம் சோதனை செய்தபோது பெண் பயணி ஒருவரின் உடமைகளில் மூன்று துப்பாக்கி தோட்டா குப்பிகளும், இரண்டு துப்பாக்கி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில் அவர் பெயர் புகாடியா லெஷ்மி லாவன்யா (வயது 41) என்றும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது .
துப்பாக்கி தோட்டாக்கள் அவரிடம் எப்படி வந்தன, அவருக்கு நக்ஸல் அமைப்பினருடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை