
சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களால் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று சென்னையில் இருந்து வரும் நபர்களால் அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலும் பெரும்பாலானவர்கள் இதே குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இதற்கும் மேலாக சென்னையில் இருந்து வரும் மக்களை கடலூர் கிராமத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று கிராமங்களில் தாண்டோரா போட்டு அறிவிக்கின்றனர்.
மதுரை நெல்லை தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து இ- பாஸ் இல்லாமல் குறுக்கு வழியில் குடும்பம் குடும்பமாக வரும் மக்களை எவ்வித சோதனையும் இன்றி பல மதிப்பதாகவும் அவர்களாலேயே தங்கள் கிராமங்களில் கொரோனா அதிகம் பரவி விட்டதாகவும் பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்துள்ளனர்.
தங்கள் கிராமங்களில் கொரோனா பரவல் அதிகமானதற்கு சென்னையில் இருந்து தங்கள் கிராமங்களுக்கு வருபவர்களும் ஒரு காரணம் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
இதனிடையே தென்மாவட்டங்களில் பல சாலைகள் மணல் கொட்டி அடைக்கப்பட்டுள்ளன வேறு எவரும் தங்கள் கிராமங்களுக்குள் வரக்கூடாது என்பதில் சிலர் தீவிரமாக இயங்கி வருகின்றனர்