தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2,396 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று 4ஆவது ஆளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது….
தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 56,000ஐ கடந்தது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,845ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரம் தமிழகத்தில் இன்று உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது கடந்த சில தினங்களாக 45 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தங்கள் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 64 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 39,000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,641ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா uயிரிழப்பு எண்ணிக்கை 700ஐக் கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 704ஆக அதிகரித்துள்ளது..கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 31,316ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று அதிக பட்சமாக 1322 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அடுத்து, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில் 95 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 85 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 18 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 11 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 26 பேருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 பேருக்கும் தொற்று உறுதியானது.